உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நில அபகரிப்பு நடவடிக்கை : ஜெயலலிதாவுக்கு பா.ஜ., பாராட்டு

நில அபகரிப்பு நடவடிக்கை : ஜெயலலிதாவுக்கு பா.ஜ., பாராட்டு

சேலம்: ''தமிழகத்தில் நில அபகரிப்பு விவகாரங்களில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையை மனம் திறந்து பாராட்டுகிறேன்,'' என, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார். சேலத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:லோக்பால் மசோதாவால், அரசை தூய்மைப்படுத்த முடியாது. தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைப் போல, 2014ம் ஆண்டு தேசிய அரசியலிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். தற்போது அரசு, மத வன்முறை தடுப்பு மசோதாவை நிறைவேற்ற உள்ளது. இந்த மசோதா சிறுபான்மையினருக்கு சாதகமானதாக இருக்கும். எனவே, அதை பா. ஜ., நிறைவேற்ற விடாது. நில அபகரிப்பு விவகாரத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, மனம் திறந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நில அபகரிப்பு விவகாரத்தில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களது நிலத்தை மீட்பதற்காக, தனிப்பிரிவு துவக்கப்பட்டது, வரவேற்கக் கூடியது. தமிழக ஆளுனர் மகன் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது, தமிழக அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு உதாரணம். இவ்வாறு இல.கணேசன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ