உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம்

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால பா.ஜ., ஆட்சி பொற்காலம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 3வது ஆட்சி காலத்தின் முதலாம் ஆண்டு இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, பா.ஜ., அரசின் சாதனைகள் பட்டியலிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால பா.ஜ., ஆட்சி பொற்காலம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது; பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவி காலத்தில், இந்தியா சீரமைப்பு, செயல்திறன் உள்ளிட்டவற்றால், வளர்ச்சி மற்றும் சுயசார்பு பாதையில் வேகமாக முன்னேறுகிறது. பிரதமர் மோடியின் இந்த 11 ஆண்டு கால ஆட்சியானது, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதிலும், பொது சேவைகளின் அர்ப்பணிப்புகளின் பொற்காலம் என்று சொல்லலாம். பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, கலாசார பெருமை மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றில், புதிய அத்தியாயத்தை இந்த நாடு கண்டு வருகிறது. 'குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச நிர்வாகம்' என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சியின் வேகமும், அளவும் மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் இந்த 11 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரை மையமாகக் கொண்டு, ஆட்சியை நடத்தி வருகிறார், இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

புரொடஸ்டர்
ஜூன் 10, 2025 09:02

பாஜக மத்திய அரசு ஆரம்பமான நாள் முதல் இந்தியாவுக்கு கற்காலம் அமித்ஷா.


R.RAMACHANDRAN
ஜூன் 10, 2025 07:43

அரசு அங்கங்களில் உள்ள குற்றவாளிகளால் எங்கும் லஞ்சம் எங்கும் வஞ்சம் எங்கும் கஞ்சா மற்றும் இதர போதை பொருட்களால் நாடு சீர்கேடு அடைந்து கொண்டிருக்கும் நிலையில் வாக்கு வங்கிக்காக பொய்யுரை செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர்.


மனிதன்
ஜூன் 09, 2025 21:11

வெக்கமே இல்லாம எப்படித்தான் வடை சுடுவாங்களோ, யப்பா முடியல, ரீல் அந்துபோய் வருஷங்களாச்சு....


Rathna
ஜூன் 09, 2025 19:22

நான் பிஜேபி ஆதரவாளர் இல்லாவிட்டாலும், இந்த புள்ளி விவரங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது, 1. 2014 - IT வரி 250000 வரை 2025 - 12 லக்ஷம் வரை வரி இல்லை. 2. ஜம்மு காஷ்மீரில் கலவரம் அப்போது. இப்போது அமைதி திரும்பி உள்ளது. 3.மாவோயிஸ்ட் கலவரம் ஜார்கண்ட், மகாராஷ்டிரா, சட்டிஸ்கர், ஒரிசா, பீகார் முழுவதும் பரவி இருந்தது. இப்போது சட்டிஸ்கர் இல் மட்டுமே. 4. ரயில்வே துறை பல மடங்கு முன்னேறி உள்ளது. 5. 15 கோடி மக்களுக்கு இலவச குடி தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 6. 12 கோடிக்கும் மேல் இலவச டாய்லெட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 7. 2014 பார்க்கும் போது தீவிரவாத சம்பவங்கள் 2242. இப்போது சில சம்பவங்களே. 8. இந்திய பொருளாதாரம் உலக அளவில் 10 வதாக இருந்தது. இப்போது 4 நிலையில் உள்ளது. 9. நடக்காதது - பங்களாதேஷிகளை ஒடுக்காதது. உள் நாட்டு தீவிரவாதம் இன்னும் குறைய வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூன் 09, 2025 18:56

இந்தியாவின் பொற்காலம் தற்போது தான் தொடங்கிவுள்ளது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஆர் எஸ் எஸ் வழிநடத்தும் பிஜேபி ஆட்சி தான்.


தஞ்சை மன்னர்
ஜூன் 09, 2025 16:43

உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளவேண்டியது தான் வடநாட்டில் இருந்து தென்னகம் வரும் ஆட்களின் எண்ணிக்கை உங்க ஆட்சி வருவதற்கு முன்னை விட இப்போது கூடி உள்ளது அதுதான் சாதனை எங்களுக்கு வேதனை மிச்சம்


மாங்காய் மன்னா
ஜூன் 10, 2025 00:22

தஞ்சை மாங்காய் மன்னா..நம் மக்கள் அனைவரும் டாஸ்மாக்கில் இருக்கும் போது வேலைக்கு ஆள் வேண்டுமே


THOMAS LEO
ஜூன் 09, 2025 16:43

GOD ONLY KNOWS.


Rengaraj
ஜூன் 09, 2025 13:41

இரண்டு ஐந்து ஆண்டுகால ஆட்சியில் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் நாடு வளர்ச்சிபாதையில் முன்னேறி பாஜகவின் மூன்றாம் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நமது இந்திய நாடு மென்மேலும் சிறக்க வேண்டும். வாழ்த்துக்கள்.


Indian
ஜூன் 09, 2025 13:41

கலி காலம்


ramesh
ஜூன் 09, 2025 13:13

அதானி, அம்பானி ,கார்பொரேட்கள் , பெட்ரோலியம் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு உண்மையிலேயே பொற்காலம் தான்


vivek
ஜூன் 10, 2025 00:23

இங்கே டாஸ்மாக் வளர்சி சொம்பு ரமேஷு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை