உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்யும் பா.ஜ.,வின் ஆபரேஷன் லோட்டஸ்; கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்யும் பா.ஜ.,வின் ஆபரேஷன் லோட்டஸ்; கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தன்னை தோற்கடிப்பதற்காக வாக்காளர் பட்டியலில் பா.ஜ., குளறுபடி செய்துள்ளதாக ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்து வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hvmaa6ne&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், டில்லியில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று ஆம்ஆத்மியும், கெஜ்ரிவால் மீதான ஊழல் புகாரை முன்வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று பா.ஜ.,வும் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தான் போட்டியிடும் நியூ டில்லி தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பா.ஜ., குளறுபடி செய்துள்ளதாக ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நான் போட்டியிடும் நியூ டில்லி சட்டசபை தொகுதியில் டிச.,15ம் தேதி முதல் பா.ஜ.,வினர் ஆபரேசன் லோட்டஸ் எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இந்த 15 நாட்களில் 5,000 வாக்காளர்களின் பெயர்களை நீக்கவும், 7,500 புதுவாக்காளர்களை சேர்க்கவும் விண்ணப்பித்துள்ளனர். இதன்மூலம் இந்தத் தொகுதியில் சுமார் 12 சதவீத வாக்காளர்கள் மாற்றப்படுகின்றனர். இதுபோன்ற விளையாட்டுக்களை அவர்கள் தேர்தல் என்று கூறுகின்றனர், எனக் கூறினார்.அதேவேளையில், ஆம்ஆத்மி கட்சியினர் போலி வாக்காளர்களை வாக்காளர்கள் பட்டியலில் சேர்ப்பதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளார். 'சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா மக்களை ஆம்ஆத்மி வாக்காளர் பட்டியலில் சேர்த்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத வாக்காளர்களை நீக்குமாறு நாங்கள் விண்ணப்பித்துள்ளோம். டில்லி தேர்தல் முடிவை சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா மக்களை தீர்மானிக்க விட மாட்டோம்,' என்றார் பா.ஜ., தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

nv
டிச 30, 2024 09:48

no 1 திருடன் அடுத்த ஆளை திருடன் திருடன் என்று கூவி தப்பிக்க பார்கிறான்.. விடாதீங்க இந்த கெஜரிவால் மகா திருடனை டெல்லி மக்களே.. ஏமாந்தது போதும்


பேசும் தமிழன்
டிச 30, 2024 08:47

கான் கிராஸ் கட்சி ஊழலை சொல்லி ஓட்டு கேட்டு வெற்றி பெற்ற பின்பு..... அதே கான் கிராஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்கினால்.... எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.... அதனால் தான் தேர்தலில் ஆப்பு அடித்து விட்டார்கள்.


K.Ayyappan
டிச 29, 2024 22:33

உத்தம தலீவா, நீ மட்டும்தான் சங்கி, மங்கி, திருட்டு கும்பல்களிடம் இருந்து நமது நாட்டைக் காப்பாற்ற முடியும். இதைப்பற்றி ஒரு வழக்கு போடு. நாங்கள் துடப்பத்தோடு காத்துக் கொண்டிருக்கிறோம். நிமித்திடலாம் நைனா.


Duruvesan
டிச 29, 2024 22:00

அப்பாடி EVM னு இனி உருட்ட முடியாது, புதுசு புதுசா கண்டு பிடிக்கணும்


ஆம் ஆத்மி
டிச 29, 2024 20:19

ரொம்ப உருட்டுறார். அதெல்லாம் சும்மா வாக்காளர் பட்டியலில் உங்க இஷ்டத்திற்கு மாற்ற முடியாது


rama adhavan
டிச 29, 2024 19:56

ஆளும் கட்சிகளின் ஊழல். வாக்காளார்களுக்கு ஒவ்வொரு ஆட்சியிலும் இலவசம் என்னும் வாயிக்கு அரிசி. எங்கே வளரும் நம் நாடு.


vijai
டிச 29, 2024 19:29

உம்மை தவிர வேற யாரும் அங்க பிராடு கிடையாது


Kavi
டிச 29, 2024 19:29

குஜுலிவால் நம்பர் ஒன் திருடன்


Kanakala Subbudu
டிச 29, 2024 19:26

இப்போதே சப்பை கட்டு கட்டி விட்டால் நாளை தோல்வி அடைந்தால் வசதியா இருக்கும்


Visu
டிச 29, 2024 19:17

நீங்க தோற்பது உறுதி படித்த தேசதுரோகி