உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.யில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம்: நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர சோதனை

உ.பி.யில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம்: நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர சோதனை

லக்னோ: லக்னோவில் உள்ள லுாலு மாலில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று(நவம்பர் 24) நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் லுாலு மால் உள்ளது. இங்குள்ள பகுதியில் கையால் எழுதப்பட்ட நான்கு வரி கடிதம் இருந்தது. அதில் லக்னோவில் உள்ள பல முக்கிய கட்டிடங்கள் மற்றும் பள்ளிகளை 24 மணி நேரத்திற்குள் குண்டுவைத்து தகர்ப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் லக்னோவில் உள்ள அரசு கட்டிடங்கள், ஹஸ்ரத்கஞ்ச் பகுதியிலுள்ள பள்ளிகள் உள்ளிட்ட பல இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், நபர்கள் மற்றும் கவனிக்கப்படாத பொருட்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.மாலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கழிவறையில் கடிதத்தை வைத்த நபரைக் கண்டறியும் பணியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை