உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 12ம் வகுப்பு மாணவன் கைது

டில்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 12ம் வகுப்பு மாணவன் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தலைநகர் டில்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கல்வி நிறுவனங்களுக்கு இமெயில் அல்லது தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வதும், அதன்பிறகு, அது புரளி என தெரிய வருவதும் வாடிக்கையாகி விட்டது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளிகளில் தேர்வு நடத்துவதை தடுக்கவே, அவன் இதுபோன்ற இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுவரையில் 6 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் அனுப்பியிருப்பதும், குறைந்த பட்சம் ஒரே தடவையில் 23 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜன 10, 2025 17:10

யார்ரா அந்தப் பையன்?... நான் தான் அந்தப் பையன்.


ديفيد رافائيل
ஜன 10, 2025 12:48

இப்ப இருக்கிற school students இதெல்லாம் அசால்ட்டா பயமே இல்லாம பண்றானுங்க. ரொம்ப ரொம்ப கொடுமை.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 10, 2025 11:13

சார் .... சார் .... அந்தப்பையன் பேரென்ன சார் ? சொல்லுங்க சார் ?


shyamnats
ஜன 10, 2025 10:53

மாணவன் என்பது உறுதி தானா? பெயரை வெளியிடலாமே


RAMAKRISHNAN NATESAN
ஜன 10, 2025 11:35

என்ன எதிர்பார்த்து பேர் ஏன் போடல ன்னு கேக்கறீங்களோ அது உண்மைதான் ன்னு புரிஞ்சுக்கணும் போல ...


Pandi Muni
ஜன 10, 2025 10:48

திராவிட கட்சியில சேர்ந்தா நல்லாவே முன்னுக்கு வருவான்


முக்கிய வீடியோ