உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி

எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: 'இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.பீஹார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி உள்ளார். முந்தைய காலக்கட்டத்தில் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் கருத்துகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் இன்று இந்தியா சொல்வதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கிறது.

இந்தியா பலவீனமானது அல்ல

இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது என்பதை நான் கூற விரும்புகிறேன். இந்தியா பலவீனமானது அல்ல. இனி தேவைப்பட்டால் எல்லை தாண்டி சென்றும் தாக்கலாம். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்த போது, அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது. ஆனால் பா.ஜ., தலைவர்களை ஊழல்வாதிகள் என்று யாராலும் குற்றம் சாட்ட முடியாது.

காங்கிரசை சாடிய ராஜ்நாத்

இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடாக மாற முடியும் என்பதை அண்டை நாடுகளும் புரிந்து கொண்டன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

MADHAVAN
மே 03, 2024 16:24

நாட்டை பாதுகாக்க துப்பில்லாதவர்கள் இந்த பிஜேபி கட்சியினர், சீனாக்காரன், பங்களாதேஷி னு எல்லாம் ஆக்கிரமிப்பு பண்றான், இவனுங்க ங்க வந்து பொய் பேசுற


MADHAVAN
மே 03, 2024 11:08

அருணாச்சல பிரதேசம் கால்பகுதியை சீன ஆக்கிரமிப்பு பண்ணிடுச்சுன்னு இவன் கட்சிக்காரன் சுப்பிரமணி சொல்றான், இங்கே வந்து கம்பி கட்டுரை கதை சொல்லுது இது


Lion Drsekar
மே 02, 2024 18:37

எல்லை பாதுகாப்பு மகிழ்ச்சி , இங்கு ஜாதி மற்றும் மதத்தின் பெயரில் கட்சிகளை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட மதத்தினரை ஏளனம செய்வதும் வேரோடு அழிபபதுமே முழுநேர தொழிலாகக்கொண்டு, மேலும் நாட்டை பிளவு படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது வெளிப்படையாக நாட்டை சீர்குலைக்கும் தொழிலை செய்து கொண்டு வருகிறார்கள், எல்லை மீறுகிறார்கள், நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையை முற்றிலுமாக முடக்கிவிட்டு சமூக விரோதிகளின் கைகளில் எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்து விட்டு எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல் மக்கள் வரிப்பணத்தில் வாழும் , வயது , அவர்கள் சார்ந்த இயக்கத்தின் பெருமையை வெளிப்படையாக பேசி தங்களுக்கும் தங்களை ஊக்குவிக்கும் சமூக விரோதிகளும் ஊக்கம் தரும் வகையில் அவர்கள்மனம் குளிரும் வகையில் நான் கோவில்களை இடித்தேன் என்றும் மற்றும் ஒவ்வொரு கடவுளின் பெயர்களையும் தனித்தனியாகக் கூறி பெருமைப்படும் ஒரு நிலையில் மக்கள் எத்தினை நாளுக்கு ஹிரண்யாய நமஹ சொல்லவேண்டும் , முதலில் நம் நாட்டைக் காப்பாற்றுங்கள் வந்தே மாதரம்


J.V. Iyer
மே 02, 2024 17:00

எல்லை பாதுகாப்பு பற்றி மகிழ்ச்சி ஆனால் பல அரசியல் கட்சி தலைவர்களே எல்லைக்குள் இருந்துகொண்டு தேச துரோகம் செய்து பாதுகாப்பற்றதாக செய்து விட்டனர் பங்களா, ரோஹிங்கிய பயங்கரவாதிகளை திருப்பி அனுப்புமவரையில் ஓயக்கூடாது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ