உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடோன் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி

குடோன் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி

பாலக்காடு; பாலக்காடு அருகே, தனியார் நெல் குடோன் சுவர் இடிந்து விழுந்ததில், விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலப்புள்ளி தேனாரி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கிருஷ்ணகுமார். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு அபிஜித், அபிநித், 5, ஆகிய இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். அபிநித் அருகில் உள்ள ஆரம்பப் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள, தனியாருக்கு சொந்தமான வயல் நிலத்தில், அபிநித் நண்பர்களுடன் விளையாட சென்றிருந்தார். அப்போது நெல் கொள்முதல் குடோன் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.சப்தம் கேட்டு, அங்கிருந்த மக்கள் ஓடிச்சென்று சுவரையும், கான்கிரீட் துாணையும் அகற்றி தலையில் படுகாயமடைந்த அபிநித்தை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து புதுச்சேரி (கசபா) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ