உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உறைவிடப்பள்ளியில் சிறுவன் கழுத்து நெரித்துக்கொலை

உறைவிடப்பள்ளியில் சிறுவன் கழுத்து நெரித்துக்கொலை

ஜால்னா: மஹாராஷ்டிராவில், உறைவிடப்பள்ளியில் படித்த சிறுவனை, சக மாணவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவின் ஜால்னா மாவட்டத்தில் உள்ள போகர்தான் பகுதியில், பழங்குடியினர் தங்கி படிக்கும் அரசு உதவி பெறும் உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு, 8 வயது சிறுவன் தங்கி படித்து வந்தான். இவனுடன், விடுதியில் தங்கி படித்த 8 மற்றும் 14 வயதுள்ள சக மாணவர்கள் நேற்று முன்தினம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரவு உணவுக்கு பின் அவர்கள் அனைவரும் விடுதியில் துாங்கினர். திடீரென நள்ளிரவில் எழுந்த இரு மாணவர்கள் தங்களுடன் சண்டையிட்ட மாணவனின் கழுத்தை கயிற்றால் நெரித்தனர். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்நிலையில், மறுநாள் காலை அந்த மாணவன் நெடுநேரமாக கண் விழிக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், அவனை எழுப்பியபோது அவன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அருகேயுள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சோதித்தபோது, சிறுவன் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இரு மாணவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை