மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago
புதுடில்லி: பார்லிமென்ட் பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில், ஆட்கொணர்வு மனுவை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2023ம் ஆண்டு டிச.,13ம் தேதி தேதி பார்லி., குளிர்கால கூட்டத்தொடரின் போது லோக்சபாவின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சபைக்குள் குதித்த மனோரஞ்சன்,34, சாகர் சர்மா ,27, ஆகிய இருவரும் லோக்சபாவிற்குள் மஞ்சள் புகையை பரவவிட்டனர். இதனால் அங்கிருந்த எம்.பி.,க்கள் அதிர்ச்சியடைந்து வெளியேறினர். இது தொடர்பாக நீலம் ஆசாத்,37. அமோல் ஷிண்டே 25 உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.வழக்கில் கைதான 6 பேரில் நீலம் ஆசாத் என்ற பெண் அடிப்படை உரிமை மீறப்படுவதாகக் கூறி மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று(ஜன.,03) டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,‛‛ நீலம் ஆசாத்தின் ஜாமின் மனு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதால் இவ்வழக்கை எடுக்கக்கூடாது என்று போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது. வாதத்தை ஏற்று ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி , அதனை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
3 hour(s) ago | 9
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago