உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் மீண்டும் பாலம் இடிந்தது: 9 நாளில் 5வது சம்பவம்

பீஹாரில் மீண்டும் பாலம் இடிந்தது: 9 நாளில் 5வது சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் இன்று மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து பாலம்இடியும் சம்பம் 5-வது ஆக அதிகரித்து உள்ளது.பீஹார் மாநிலம் மதுபானி மாவட்டம் மாதேபூர் என்ற பகுதியில் முக்கிய ஆற்றின் குறுக்கே கடந்த 2021ம் ஆண்டு ரூ. 3 கோடியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் இப்பாலத்தில் சுமார் 75 மீ தொலைவிற்கு இடிந்து விழுந்தது. விழுந்த பாலத்தின் மீது தார்பாலினை மூடி வைத்து உள்ளனர். இதன் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இன்று இடிந்த விழுந்தது 5 வது சம்பவம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய சம்பவங்கள் வருமாறு

1) ஜூன் 19-ம் தேதியன்று அராரியா மாவட்டத்தின் பகாரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.2) ஜூன் 22-ம் தேதியன்று சிவான் மாவட்டத்தில் காங்டாக் கால்வாய் குறுக்கே கட்ட பாலம் இடிந்து விழுந்தது.3) ஜூன்23-ம் தேதியன்று கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம் இடிந்து விழுந்தது.4) ஜூன் 26 கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் கங்கை நதியை மஹாநந்தா நதியுடன் இணைக்கும் துணை நதியான மடியாவின் குறுக்கே, 70 மீட்டர் நீளத்துக்கு பாலம் இடிந்து விழுந்தது.5) இன்று (ஜூன் 28) மதுபானி மாவட்டத்தில் 5-வது சம்பவமாக பாலம் இடிந்து விழுந்தது. இதன் மூலம் கடந்த 9 நாட்களில் 5 வது முறையாக பாலம் இடிந்து விழும் சம்பவம் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கிருஷ்ண ஸ்ரீ
ஜூன் 29, 2024 20:43

பிஹாருக்கு மிகக்.கேவலமாக ஆட்சி நடக்கும்.மாநிலம்னு சிறப்பு அந்தஸ்து குடுக்கலாம்.


subramanian
ஜூன் 29, 2024 15:55

இது அந்நிய நாட்டின் சதிவேலையாக இருக்க சாத்தியம் அதிகம். இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்கா உட்பட பல நாடுகளின் கண்ணை உறுத்துகிறது.


அப்புசாமி
ஜூன் 29, 2024 09:48

அஞ்சாறு தடவையா கட்சி மாத்தி மாத்தி ஆட்சி செய்யும் நிதீஷ் குமாரின் இமாலய சாதனை. பாலத்தின் கீழே இருந்த மணலையெல்லாம் நோண்டி எடுத்திருப்பாங்க.


Velan
ஜூன் 29, 2024 05:59

வெறும் மண்ணால கட்டி இருப்பாங்க போல. என்ன அரசோ என்ன நிர்வாக மோ ஒரு லெவலுக்கு மேல் இலங்கையில் ஏற்பட்ட சூழல் ஏற்பட கூடும்


தாமரை மலர்கிறது
ஜூன் 29, 2024 01:05

பாலம் இடிந்ததற்கு காரணம் தமிழகத்திலிருந்து சென்ற சிமென்டில் கலப்படம் இருந்திருக்கலாம்.


venugopal s
ஜூன் 29, 2024 07:30

இதைத்தான் முற்றிப் போன கேஸ் என்பார்கள், ஆனால் மருத்துவம் பார்த்தால் குணமாகி விடும்!


Gaxxx Saxxx
ஜூன் 28, 2024 23:31

உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சதி ஏதேனும் உள்ளதா என்று நன்றாக விசாரிக்கவும்


மேலும் செய்திகள்