உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2026ல் புல்லட் ரயில்!

2026ல் புல்லட் ரயில்!

மும்பை - ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டம், 2026 ஜூலை முதல் செயல்பாட்டுக்கு வரும். இதன் வாயிலாக மும்பையில் இருந்து ஆமதாபாதிற்கு இரண்டு மணி நேரத்தில் செல்லலாம். முந்தைய உத்தவ் அரசு போட்ட முட்டுக்கட்டையால் இந்த திட்டம் தாமதமானது.அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே அமைச்சர், பா.ஜ.,

அனைத்திலும் வெற்றி!

பா.ஜ., உடனான கூட்டணியிலோ, தொகுதி பங்கீடு தொடர்பாகவோ எந்த ஒரு பிரச்னையும் இல்லை. கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் நோக்கம்.குமாரசாமி, தலைவர், ம.ஜ.த.,

சீனாவிடம் எச்சரிக்கை!

லடாக் எல்லை பிரச்னையில் சீனா, 'மைன்ட் கேம்' ஆட நினைக்கலாம். இரு நாட்டு உறவில் சுமுக நிலையை ஏற்படுத்த, இந்தியா உலக நாடுகளை அணுகக்கூடாது என்பதே சீனாவின் நோக்கம். இந்த விஷயத்தில் சீனாவிடம் எச்சரிக்கையாக இருக்க விரும்புகிறோம். ஜெய்சங்கர், வெளியுறவு அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை