மேலும் செய்திகள்
அரசு பஸ் மோதி சிறுமி பலி
03-Sep-2025
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கருநாகப்பள்ளி அருகே தேவலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ் தாமஸ் 44. மனைவி விந்தியா. இவர்களது குழந்தைகள் அதுல் 14, அல்கா 5, ஐஸ்வர்யா. நேற்று காலை பிரின்ஸ் தாமசின் உறவினர் அமெரிக்கா செல்வதற்காக அவரை கொச்சி விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்துவிட்டு காரில் குடும்பத்தினருடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். காலை 6:30 மணியளவில் கொல்லம் அருகே ஓச்சிரா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மீது கார் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் முழுவதுமாக நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி பிரின்ஸ் தாமஸ், அதுல், அல்கா ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மனைவி விந்தியா மற்றொரு மகள் ஐஸ்வர்யா மற்றும் பஸ் பயணிகள் 16 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
03-Sep-2025