உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்த பண்டிகை காலத்தில் சுதேசி பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி அழைப்பு

இந்த பண்டிகை காலத்தில் சுதேசி பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சுதேசி பொருட்களை வாங்கி 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பை, பண்டிகையுடன் கொண்டாடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.சர்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான வரி உயர்வு மற்றும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து, இந்திய பொருளாதாரத்தை தக்க வைக்கவும், வளர்த்தெடுக்கவும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்துமாறு பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gy5lb1hg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமரின் வேண்டுகோளை தொடர்ந்து சுதேசி நிறுவனங்களுக்கு இந்தியர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஒரு உதாரணமாக தான் சுதேசி செயலியான அரட்டைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து உள்ளது. கடந்த 2021ல் உருவாக்கப்பட்ட அரட்டை செயலுக்கு தற்போது பயனர்களின் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டு வருகிறது.இந்நிலையில் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறு வணிகங்களை மேம்படுத்தவும், இந்தியாவின் பொருளாதார தன்னிறைவை வலுப்படுத்தவும் உள்நாட்டு பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.இந்தியப் பொருட்களை வாங்கி, சுதேசி என்று பெருமையுடன் சொல்லுங்கள்.நீங்கள் வாங்கிய பொருட்களை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் மற்றவர்களும் இதைச் செய்ய ஊக்கமளிப்பீர்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Jebakumar Buttrick
அக் 21, 2025 16:12

சொல்பவர் செயலில் காட்டி முன் உதாரணமாக இருப்பது நல்லது


Thravisham
அக் 21, 2025 07:30

சுதேசி பொருட்களின் தரம் உயர்ந்ததாக இருந்தால் அது கண்டிப்பாக விற்பனை ஆகியே தீரும். தரம் நிரந்தரம். Quest for Quality is Passport to Prosperity


Venugopal S
அக் 20, 2025 17:58

என்னவோ தெரியவில்லை, இவர் பேச்சைக் கேட்கும் போது ட்ரம்ப் ஞாபகம் வருகிறது, ட்ரம்ப் பேச்சைக் கேட்கும் போது இவர் ஞாபகம் வருகிறது!


RAMESH KUMAR R V
அக் 20, 2025 14:09

விலை மட்டும் பார்த்தால் போதாது இந்தியன் சுதேசி என்று தனி அடையாளம் இருக்க வேண்டும் Standard.


திகழ்ஓவியன்
அக் 20, 2025 12:31

இதை யார் சொல்லுவது


Vasan
அக் 20, 2025 11:50

ஒன்றிய மற்றும் குன்றிய அரசுகள் தலையிட்டு, தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறந்து, மறுபடியும் இயங்க அனுமதித்தால், தாமிரம் அதாவது காப்பர், உள்நாட்டிலேயே தயாரிக்கலாம். இதனால், அதை இறக்குமதி செய்வதை குறைக்கலாம். விலையும் குறையும். அதை மூல பொருளாக கொண்ட பொருட்களின் விலையும் குறையும். உதாரணம் எலக்ட்ரிகல் கேபிள், வொயர் போன்றவை.


Indian
அக் 20, 2025 10:20

நாங்க மட்டும் ஜெர்மன் BMW கார் பயன்படுத்துவோம் .


Raja k
அக் 20, 2025 09:40

,அது சரி எதோ தீபாவளி பரிசு தரேனு 2 மாசத்துக்கு முன்னாடி அடிச்சுவிட்டிங்களே, அது என்னாச்சு


N Sasikumar Yadhav
அக் 20, 2025 09:50

அதான் GST வரியை குறைத்திருக்கிறார்களே வேறென்ன வேண்டும்


vivek
அக் 20, 2025 12:54

கோமாவில் இருந்தாயா


Ajrjunan
அக் 20, 2025 09:16

தீபாவளி வடை சுட்டுக்கொடுக்கிறார்


N Sasikumar Yadhav
அக் 20, 2025 09:52

உங்க திராவிட எஜமான் மாதிரியான வடை யாராலையும் சுட்டு தரமுடியாது


Vasan
அக் 20, 2025 08:58

கையில் காசு இருந்தால் தானே வாங்க முடியும், அதிக விலையில் விற்கும் சுதேசி பொருட்களை. நேற்று ஸ்டாண்டர்ட் வெடி கடைக்கு சென்றேன். சங்கு சக்கரம் 10 அடங்கிய ஒரு பாக்கெட் 1381 ரூபாய். புஷ்வாணம் 10 அடங்கிய ஒரு பாக்கெட் 1277 ரூபாய். கம்பி மத்தாப்பு 10 அடங்கிய ஒரு பாக்கெட் 506 ரூபாய். ஆனால் சீனா வெடிகளோ மிக குறைந்த விலையில் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள்.


N Sasikumar Yadhav
அக் 20, 2025 09:49

திமுக களவானிங்க மாதிரி டுபாக்கூர் வேலை செய்யாதீர். காலம்காலமாக அந்த பெட்டியில் எழுதியிருக்கிற விலையைத்தான் கொடுக்கிறீர்களா. அனைத்து வகை பட்டாசு பெட்டிகளிலும் அந்த மாதிரியான விலையைத்தான் எழுதியிருக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை