உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 16 பஞ்., வார்டுகளுக்கு 23ல் இடைத்தேர்தல்

16 பஞ்., வார்டுகளுக்கு 23ல் இடைத்தேர்தல்

கோலார்: கோலார் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளில் காலியாக உள்ள 16 இடங்களுக்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது.இது குறித்து வெளியான தேர்தல் கால அட்டவணை:வேட்புமனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது. தேர்தல் நடக்கும் கிராமங்களில் இம்மாதம் 26 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். ஒவ்வொரு தாலுகாவிலும் தாசில்தார், தேர்தல் அதிகாரியாக இருப்பர்.இடைத்தேர்தல் நடக்கும் கிராம பஞ்சாயத்துகள் விபரம்:சீனிவாசப்பூர்: பைரகானபள்ளி வார்டு எண் 1, ஹோதலி வார்டு எண் 17.முல்பாகல்: உத்தனூர் வார்டு எண் -11, ஹனுமனஹள்ளி வார்டு எண் -16, கும்பகல்லு வார்டு எண் -18, தாயலுார் வார்டு எண்- 25, தோலபள்ளி வார்டு எண் -27, சொன்னவாடி வார்டு எண் -29.பங்கார்பேட்டை: சின்ன கோட்டை வார்டு எண்- 10.கோலார்: அரஹள்ளி வார்டு எண் 9, கொண்ட ராஜன் ஹள்ளி வார்டு எண் -11, மார்ச்சு ஹம்பி வார்டு எண் -12, மதுவத்தி வார்டு எண்- 18, கேளனுார் வார்டு எண் -26.மாலுார்: ஜெயமங்களா வார்டு எண்: 22, தின்னஹள்ளி வார்டு எண்- 28.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !