உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்; எதிர்ப்பு வலுத்தது நேற்று; முடிவு வந்தது இன்று!

சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்; எதிர்ப்பு வலுத்தது நேற்று; முடிவு வந்தது இன்று!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொங்கலன்று நடைபெற இருந்த சி.ஏ., தேர்வு நடத்த கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மாற்றம் செய்யப்பட்டது. ஜனவரி மாதம் 14ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜன.,16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.பொங்கல் பண்டிகை தினமான ஜனவரி 14 மற்றும் 16ம் தேதிகளில், 'சி.ஏ' தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. பொங்கல் திருவிழா என்பது, தமிழகத்தின் தனித்துவமிக்க பண்பாட்டு திருவிழா. இதை கருத்தில் வைத்து, தேர்வர்களுக்கு சிரமமின்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. பொங்கல் அன்று தேர்வு தேதியை மத்திய அரசு உடனே மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். சி.ஏ., தேர்வு தேதியை மத்திய அரசு முடிவு செய்வதில்லை; ஐ.சி.ஏ.ஐ., என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு நடத்துகிறது. அவ்வமைப்பு தான் தேர்வுக்கான தேதியை தீர்மானித்து அறிவிக்கிறது. மற்றபடி, நிதி அமைச்சகத்துக்கும், இந்த நடைமுறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இந் நிலையில், இன்று (நவ.,26) பொங்கல் பண்டிகை அன்று ஜனவரி மாதம் 14ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜன.,16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜன., 12, 16, 18, 20 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Dharmavaan
நவ 26, 2024 18:56

இதை ஒரு வெற்றியாக மத்திய அரசு வணங்கி விட்டதாக வெங்கடேசன் போன்ற உண்டி குலுக்கி பிச்சைகள் கொண்டாடும்


Bala
நவ 26, 2024 14:58

CA பரீட்சை ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது என்று இதிலிருந்தே தெரிகிறது. மத்திய அரசு பொங்கலுக்கு எதிரானது, தமிழர்களுக்கு எதிரானது என்று மக்களிடையே ஒரு புரட்டை உருட்ட திட்டமிட்ட இந்த சீன கம்யூனிஸ்ட் கயவர்களுக்கு விழுந்தது சம்மட்டி அடி


வைகுண்டேஸ்வரன்
நவ 26, 2024 16:35

ஒரு உருட்டு புரட்டும் எவனும் சொல்லவில்லை. முதலில் வாய தொறந்தது, தமிழ்நாடு பாஜக வின் சூர்யா. அந்த கயவருக்கு வாழ்த்துக்கள் சொன்னது நிதி அமைச்சர் நி சீதாராமன் தான். ஏன் இவங்களுக்கு, இது தன்னாட்சி பெற்ற நிறுவனம் னு தெரியாதா? எதுக்கு ஒன்றிய அமைச்சர் கமெண்ட் பண்ணனும்?


வைகுண்டேஸ்வரன்
நவ 26, 2024 16:39

CA பரீட்சை ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது என்று நீங்களே சொல்றீங்க. அப்புறம் ஏன் சீன கம்யூனிஸ்ட் இதில் வருது? அவிங்களுக்கு வேற வேலை இல்லையா? சீனாவின் சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், மருத்துவம், மின்சாரம் என்று அனைத்து துறைகளிலும் அவர்கள் அடைந்து கொண்டிருக்கும் வளர்ச்சிகளைப் பாருங்கள். அவர்களா கயவர்கள்? அவர்கள் எங்கியோ போயிட்டாங்க. இங்க நீங்க கம்யூனிஸ்ட் கயவர்கள் னு எழுதிண்டிருப்பது பரிதாபம்.


Nellai Ravi
நவ 26, 2024 13:48

நான் ஒரு CA. இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. தேர்வு முடிவுகளில் கண்ட்ரோல் உண்டு. யாரும் தலையிட மாட்டார்கள். அதனால் தான் CA வுக்கு இன்று வரை மரியாதை. தெரியாமல் கமெண்ட் எழுத வேண்டாம்,


MADHAVAN
நவ 26, 2024 11:54

நிம்மி மேடமு பாவம்,


ஆரூர் ரங்
நவ 26, 2024 12:23

அடுத்து தமிழகத்தில் கேழ்வரகு கொள்முதல் தோல்விக்கும் மத்திய நிதியமைச்சரைத்தான் குறை சொல்வீர்கள். இது ஆணாதிக்க மனப்பான்மை என்று சொல்லலாமா?


Mohan
நவ 26, 2024 11:12

என்னமோ 8 கோடி பெரும் போயி சி எ தேர்வு எழுத போற மாதிரி ..எழுதறது என்னமோ 100 - 200 பேர் தான் இருக்கும் இதுக்கு போயி தேர்வை மாத்தி வெச்சிருக்கீங்க இந்த அறிவாளிகள் சொல்றங்கன்னுட்டு ஏமா எதுக்கு எதுக்கு குமியராதுனு ஒரு விவஸ்த வேண்டாமா ..


சூரியா
நவ 26, 2024 10:51

திராவிடர்கள் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு மாடு பிடிப்பார்களே!


pmsamy
நவ 26, 2024 11:04

உன்னதான் புடிக்க போறாங்க


R Dhasarathan
நவ 26, 2024 10:26

மாணவர்களின் கவன சிதறல் மதிப்பெண்கள் குறைத்து விடும்.


சம்பா
நவ 26, 2024 10:01

சும்மா பேருக்குதான் தண்ணாட்சி மற்றபடி ?


M Sivasankar
நவ 26, 2024 09:49

வணக்கம். Road repair works and water body development works on Perungudi MRTS and Velacherry MRTS link road started with lots of fanfare and coverages in the local dailies suddenly stopped . pathetic. Reason political interference?


Shekar
நவ 26, 2024 09:49

அதெல்லாம் முடியாது. அன்னிக்கி காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள். இது தமிழர்களை பழி வாங்கும் செயல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை