உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மறக்க முடியுமா : இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் நினைவு தினம்

மறக்க முடியுமா : இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் நினைவு தினம்

கடந்த 2008 நவ., 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் ஊடுருவி சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் கண்ணில் பட்ட அப்பாவி மக்களை சுட்டுக்கொன்று தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர்.இந்த தாக்குதலில் உள்பட 166 பேர் பலியாகினர். இதன் 16-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கைதான கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டார்.பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2 நாட்கள் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் பலரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்ததால், அவர்களை உயிருடன் மீட்க நமது வீரர்கள் போராட வேண்டியிருந்தது. இதில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஹேமந்த் கர்கரே, ராணுவ உயர் அதிகாரி சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். முடிவில் 10 பயங்கரவாதிகளில் ஒருவனை தவிர, 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Baskar
நவ 26, 2024 13:48

பிஜேபி இருக்கும் வரை பயம் இல்லை . வேற எந்த கட்சி வந்தாலும் அந்நிய சொல் பேச்சு கேட்பார்கள்


ஆரூர் ரங்
நவ 26, 2024 11:40

பாகிஸ்தான் ராணுவம்தான் அத்தாக்குதலை நடத்தியது என்று அங்குள்ள அரசியல்வாதிகளே ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் இங்கிருந்த சோனியா அரசு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ஒரு எதிர்த்தாக்குதலையும் நடத்தவில்லை. மகா கோழைத்தனமான மன்மோகன் அரசு.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 26, 2024 10:42

ஹிந்து வாக்குவங்கி உருவானால் அனைத்தும் சரியாகும் .....


Balasubramanian
நவ 26, 2024 08:33

2008 இல் சம்பவம் நடந்தும் அந்நிய ஊடுருவல் தீவிரவாதியை தூக்கில் இட நான்கு ஆண்டுகள் (2012) ஆகின! நாணல் போல வளைந்து ரப்பர் போல இழுக்கப்படும் நம் சட்டம் மற்றும் அதில் உள்ள ஓட்டைக்கு இது மேலும் ஒரு சான்று! அதை வைத்து பல அரசியல் தலைகள் எது செய்தாலும் கேட்க யாரும் இல்லை என்பது போல உட்பகை செய்து திரிகின்றனர்


Kasimani Baskaran
நவ 26, 2024 05:39

அப்பொழுது ஆண்டுவந்த காங்கிரஸ் அரசு இதில் தொடர்புடைய பலரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. பலர் வெளிநாடுகளுக்கு சென்று தப்பித்து விட்டார்கள். இன்னும் கூட பலர் பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் விட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.


sundar
நவ 26, 2024 04:44

இது போன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மஹா.வில் காங்.ஒதுக்கப்பட்டுள்ளது.அங்கு மாலேகாவ் தொகுதியில் 80% அனைத்துக் கட்சிகளும் இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தின.ஆயினும் இஸ்லாமியர், தங்கள் மத அடிப்படை வாத கட்சிக்கே வாக்களித்தனர்.போலி மத சார்பின்மை பேசும் காங்.பெற்றது 3% வாக்குகள் தான்.ஹிந்துக்கள் விழித்துக் கொண்டால் தான் நாட்டின் பாதுகாப்பு ஆபத்து நீங்கும்.மும்பை தாக்குதலில் உயிர் நீத்த ஹிந்துக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்.


சமீபத்திய செய்தி