மேலும் செய்திகள்
தேசியம்
13 minutes ago
நீர்மூழ்கி கப்பலில் பயணித்து ஜனாதிபதி முர்மு சாதனை
14 minutes ago
சேவைகள் குறைபாடு வோடாபோன் முதலிடம்: ஆய்வில் தகவல்
1 hour(s) ago
காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது: கார்கே
3 hour(s) ago | 5
ராம் நகர்: லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால், வாக்குறுதி திட்டங்களை ரத்து செய்வது நல்லது, என மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தெரிவித்தார்.ராம்நகர், மாகடியில் நேற்று அவர் கூறியதாவது:பா.ஜ., மதவாத அரசியலின், மந்திராக்ஷதை வேண்டுமா அல்லது மக்களின் வாழ்க்கையை மாற்றும், காங்கிரசின் வாக்குறுதி திட்டங்கள் வேண்டுமா என்பதை மக்களே, லோக்சபா தேர்தலில் முடிவு செய்யட்டும். ஒருவேளை இந்த தேர்தலில், காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால், அரசின் வாக்குறுதி திட்டங்களை மக்கள் நிராகரித்துள்ளனர் என, அர்த்தமாகும்.அதிகமான தொகுதிகளை காங்., கைப்பற்றாவிட்டால், வாக்குறுதி திட்டங்களை ரத்து செய்வது நல்லது. பா.ஜ.,வினரை போன்று நாங்களும், கோவில் அரசியல் செய்ய வேண்டி வரும்.மக்களின் ஓட்டு மந்திராக்ஷதைக்கா அல்லது வாக்குறுதி திட்டங்களுக்கா என்பதை, ஆலோசித்து முடிவு செய்யட்டும். திட்டங்களின் அடிப்படையில், நாங்கள் ஓட்டு கேட்கிறோம்.இவ்வாறு அவர்கூறினார்.
13 minutes ago
14 minutes ago
1 hour(s) ago
3 hour(s) ago | 5