உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற முடியாது: 100% ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி

‛மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற முடியாது: 100% ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி

புதுடில்லி: ‛‛மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு செல்ல முடியாது எனக்கூறிய உச்சநீதிமன்றம், 100 சதவீதம் ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

வழக்கு தாக்கல்

லோக்சபாவுக்கு தேர்தல் நடந்து வருகிறது. தற்போது ஒரு தொகுதியில் 5 ஓட்டுச்சாவடிகளில் பதிவாகும் ஓட்டுகள், ‛விவிபாட்' இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. அனைத்து ஓட்டுச்சாவடிகளில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்தது.

துணை தேர்தல் கமிஷனர் விளக்கம்

கடந்த 24ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்தல் கமிஷனின் துணை தேர்தல் கமிஷனர் திலேஷ் குமார் வியாஸ் நேரில் ஆஜராகி அமர்வின் தொழில்நுட்ப கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனையடுத்து, உச்சநீதிமன்றம், தேர்தல்களை கட்டுப்படுத்தும் ஆணையம் அல்ல. அரசியலமைப்பு சட்ட அமைப்பான தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளில் உத்தரவிட முடியாது எனக்கூறி நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

நிராகரிப்பு

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அனைத்து ஓட்டு உறுதிச்சீட்டுகளையும் எண்ணக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மீண்டும் பழையபடி ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தனர்.

இரண்டு உத்தரவுகள்

மேலும் தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன்படி, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னங்களை பொருத்திய பிறகு அதனை சீல் வைத்து பாதுகாக்க வேண்டும். சீல் வைக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு, குறைந்த பட்சம் 45 நாட்களுக்கு பாதுகாக்க வேண்டும்.அடுத்ததாக, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் சந்தேகம் இருந்தால் வேட்பாளர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்க கோரலாம் . சீல் வைக்கப்பட்ட இயந்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து சரிபார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இயந்திரத்தை சரிபார்க்க கோரிக்கை வைத்த வேட்பாளரே முழு செலவையும் ஏற்க வேண்டும். இயந்திரம் பழுதடைந்தது உறுதி செய்யப்பட்டால், வேட்பாளரின் செலவுத்தொகை திருப்பி தரப்படும் என உத்தரவிட்டனர்.

சந்தேகிக்க முடியாது

தொடர்ந்து, மின்னணு ஓட்டு இயந்திரம், ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை நீதிமன்றம் சரிபார்த்தது. தொழில்நுட்ப ரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாக என அனைத்து விசாரணையையும் நடத்தினோம். அறிவியல் பூர்வமான விமர்சனமே தேவை. கண்மூடித்தனமாக அனைத்தையும் சந்தேகிக்க முடியாது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறோம் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Senthil K
ஏப் 26, 2024 23:44

ஐயையோ... கான் குல சிங்கம்.. நேரு குல தங்கம்.. காந்தி குல பங்கம்... எங்கள் ராகூல் ஜி.. இனி எப்போதும் பிரதமராக முடியாதா??


Barakat Ali
ஏப் 26, 2024 21:49

பாஜக மக்கள் ஆதரவுடன் ஜெயித்தாலும் இப்படி அழுது, புலம்பி கோர்ட்டுக்கு போகத்தான் செய்வோம்


muthu
ஏப் 26, 2024 20:56

In one election with the help of officials interchanged the symbols with higher votes and changed the result in the name of recounting Will the same mistakes repeat or not


DR Sanaathan Rakshak Sanga Nadar
ஏப் 26, 2024 20:12

சரியான செருப்படி


A1Suresh
ஏப் 26, 2024 19:04

பெயரில் மட்டுமே முன்னேற்றம் வைத்துக் கொண்டால் எப்படி ? திராவிட முன்னேற்ற கழகங்களாம் செயலிலும் முன்னேற்றம் காணவேண்டாமா? பழைய முறையான ஓட்டுசீட்டை விட்டு ஈவிஎம் தேர்ந்தெடுங்கள்-முன்னேறுங்கள் அதேபோல பழைய கரென்சி நோட்டுக்களை விட்டு டிஜிட்டல் கரென்சிக்கு முன்னேறுவோம்


தாமரை மலர்கிறது
ஏப் 26, 2024 19:00

மிக அற்புதமான கொண்டாடப்படவேண்டிய நேர்மையான நியாமான சரியான தீர்ப்பு தொகுதிக்கு ரெண்டு சதவீத மெஷின்களின் எண்ணிக்கையை எண்ணவேண்டும் என்று அக்கப்போர் பேர்வழிகள் சொல்வதே, ஏதாவது தப்பு கிடைக்காதா அதை வைத்து தேர்தலை நிறுத்திவிடமுடியுமா என்ற நப்பாசையில் தான் தென் இந்தியாவிற்கு ஒரு மெஷின் மற்றும் வடஇந்தியாவிற்கு ஒரு மெஷினின் ஒப்புகை சீட்டை எண்ணிப்பார்த்தால் போதும் கம்ப்யூட்டர் எப்போதும் தவறாக சொல்லாது ராமர் கோவிலை கட்டியதன் மூலம் மோடி நானூறு சீட்களை வெல்வது உறுதி செய்யப்பட்டுவிட்டது மெஷினை காட்டி, தேர்தல் ரிசல்ட்டை தள்ளிபோட முடியுமா என்று எதிர்க்கட்சிகள் யோசிக்கிறார்கள் கயவாளிகளின் எண்ணம் நிறைவேறாது அடுத்து இந்தியர்களின் கனவுத்திட்டம் ஒரே நாடு ஒரே தேர்தல் விரைவில் நிறைவேற்றப்படும் அடிக்கடி தேர்தல் நடத்துவது, இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானது அடுத்த ஐந்தே ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் இருபது ட்ரில்லியன் ஆகிவிடும் இந்தியா பணக்காரர்களின் நாடாக மாறிவருகிறது


Rajarajan
ஏப் 26, 2024 17:11

மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்கின்றனர் என்று குற்றம் சாடியவர்களிடம், தமிழகத்தில் எப்படி அணைத்து இடங்களிலும் இதே இயந்திரம் மூலம் வெற்றி பெற்றீர்கள் என்று கேட்டால், பதில் இல்லை ஜெயித்தால் ஜனநாயகத்திற்கு வெற்றி தோற்றால் வாக்கு இயந்திரத்தில் மோசடி ஆகா ஆகா தோற்பதற்கு சரியான காரணம் கண்டுபிடிக்கின்றனர்


Kasimani Baskaran
ஏப் 26, 2024 16:29

வாக்குச்சீட்டு முறை வந்தால் எப்படியாவது பெட்டியை மாற்றி விடலாம் என்ற நப்பாசையில் இருந்தார்கள் இப்பொழுது கூட காசு கொடுத்து ஓட்டை வாங்குவதுதானே பேசன்


TR BALACHANDER
ஏப் 26, 2024 16:09

கம்ப்யூட்டர் , செல்போன் ,பைபாஸ் ரோடு ,இன்டர்நெட் ,கார்டு இல்லாமல் ? வளர்ச்சி ஏற்று கொள்ளவேண்டும் புதிய தொழில் நுட்பம் ஏற்றுக்கொள்ளவேண்டும் புதுமை என்றும் நாட்டின் வலிமை ஜெய் ஹிந்து பாரதம்


Senthil K
ஏப் 26, 2024 15:37

ஐயையோ... அப்புறம் கள்ள ஓட்டு போட்டாவது.. எங்கள்... டலீவர்... . நேரு குடும்ப தங்கம்.. கான் குல பங்கம்... ராகூல் காந்தி ஜி... பிரதமர் ஆகவே முடியாதா???


மேலும் செய்திகள்











புதிய வீடியோ