உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நயன்தாராவுக்கு எதிராக மஹாராஷ்டிராவிலும் வழக்கு

நயன்தாராவுக்கு எதிராக மஹாராஷ்டிராவிலும் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தானே: தமிழில் முன்னணி நடிகையான நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில், கடவுள் ராமருக்கு எதிராகவும், ஹிந்து மதத்திற்கு எதிராகவும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மீது, பல்வேறு மாநிலங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மத்திய பிரதேச போலீசார் வழக்கு பதிந்தனர். அதைத் தொடர்ந்து மஹாராஷ்டிராவின் தானேவைச் சேர்ந்த மிரா பயேந்தர், போலீசில் புகார் அளித்தார்.அதனடிப்படையில் நயன்தாரா உட்பட படக்குழுவினர் எட்டு பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். இரு பிரிவினரிடையே மோதலை துாண்டுவது, மத உணர்வுகளை புண்படுத்துவது, வழிபாட்டு தலத்தை அவமதிப்பது, கூட்டாக குற்றச் செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Rajah
ஜன 13, 2024 12:56

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பாருங்கள். அதில் பங்கு கொள்ளும் மாற்று மதத்தினர் தங்கள் உடையிலோ அல்லது வேறு எதிலும் தங்கள் மதத்திற்க்கு ஒவ்வாத எதையும் செய்ய மாட்டார்கள். இது ஒரு சின்ன உதாரணம். பொங்கல் நிகழ்ச்சி பாருங்கள்.


pandit
ஜன 13, 2024 12:30

அரசு வக்கீல்கள் பிஸி. மாநிலம் வாரியாக அனுப்பப்படுவார்கள்


Svs Yaadum oore
ஜன 13, 2024 06:46

மஹாராஷ்டிரா...மத்திய பிரதேசம் ..அடுத்து கர்நாடகாவிலும் கேஸ் புக் செய்து உள்ளே தள்ளனும்


Svs Yaadum oore
ஜன 13, 2024 06:44

மனை இணை துணை என்று அந்த கணக்கில் வரும் ...


NicoleThomson
ஜன 13, 2024 05:38

இயக்குனர் , தயாரிப்பாளர் , சென்சார் போர்ட் உறுப்பினர்கள் போன்றோரையும் இந்த கேசில் இணைந்திருக்க வேண்டும்


நரேந்திர பாரதி
ஜன 13, 2024 07:06

சென்சார் போர்ட் என்பது பெயருக்குத்தான்... மத்தபடி அது இன்னுமொரு டீ,


Senthoora
ஜன 13, 2024 07:37

இதுவரை அந்த படம் வந்ததில் இருந்து எதாவது, இனத்துவேஷம், மத விரோதம் வந்ததா?மஹாராஷ்டிரா மக்களுக்கு தமிழகம் சினிமாவில் தமிழன் வளர்வதை, தமிழ்நாட்டு வளர்ச்சியில் பொறாமை உண்டு, அதுக்கு தமிழகமக்களும் அவர்களுக்காக வக்காலத்து வாங்குவது தப்பு, இப்படிப்போனால் இஸ்லாமியர்களையும் மாட்டார் இனத்தவர்களை இந்தியாவில் இருந்து வெளியற்றிவிடுங்க, பிரச்சனை முடியும். மக்கள் நாயகன் விஜயகாந்த் இஸ்லாமியரை அரவணைத்தார் இஸ்லாமிய சின்னமான 786 சின்னத்தை அணிந்திருந்தார், இஸ்லாமிய பெருநாளை கொண்டாடி விருந்துவைத்தார், நீங்கெல்லாம் சாப்பிட்டீர்கள்தானே, யாரவது இஸ்லாமியராக மாறினார்களா அல்லது வன்முறை வந்ததா. இதுக்கு முன் பலப்படங்கள் வந்தது இப்போ என்ன வந்தது.


Ashok Subramaniam
ஜன 13, 2024 11:47

இது இனத்துவேஷம், மத விரோதம் பற்றியல்ல இது பிராமணர்களைக் கொச்சைப் படுத்தும் நோக்கத்தில் சொல்லப்பட்டது. அதுவும் ஆசாரமாக இருக்கும் ஒரு கோவில் பட்டாசாரியரின், அதுவும் பிரதம வைஷ்ணவக் கோவிலான ஶ்ரீரங்கத்தில் கோவில் தளிகை செய்யும் பட்டரின் பெண்ணாகக் காட்டவேண்டிய அவசியம் என்ன? இதையே ஒரு முஸ்லீம் இந்து கடவுளை வணங்கி, பன்றிக் கறியை சமைத்து, ருசிபார்ப்பதாக எடுத்திருக்கத் துணிவுண்டா? அதையும் உங்களது பரந்த மனம் கொண்டு ஆதரிப்பார்களா?ஆதரிப்பீர்களா?


Shekar
ஜன 13, 2024 13:01

விஸ்வரூபம் படத்தில் என்ன இந துவேசம் வந்தது, ஆப்கானிய தீவிரவாதிகள் அவர்கள் செய்ததைத்தானே சொல்லமுடியும், அதற்கு ஏன் ஆர்ப்பாட்டம், கேரளா ஸ்டோரிக்கு ஏன் எதிர்ப்பு.


Suppan
ஜன 13, 2024 16:59

அந்தப் புகாரிலிருந்து தப்பிக்க அந்தப்பெண்ணுக்கு அன்னபூரணி என்று பெயர் வைத்தார்கள். ஏனென்றால் வைணவர்கள் தங்கள் பெண்களுக்கு இந்தப்பெயரை வைக்க மாட்டார்கள்.


வெகுளி
ஜன 13, 2024 04:48

துணைநடிகரின் துணை இருந்தால் எப்படி வேண்டுமென்றாலும் நடிக்கலாம் என்பது சரியல்ல... பொதுமக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாதவன் என்ன கலைஞன்?...


Mani . V
ஜன 13, 2024 04:12

இப்படியே போனா எங்க பாலிடால் களத்தில் இறங்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம் - இப்படிக்கு கொத்தடிமை ஊபீஸ் சங்கம்.


NicoleThomson
ஜன 13, 2024 05:41

பாலிடாயில் குடிச்சுப்புடுவேன் என்றே அமீசர் வரை பதவி பெற்றுவிட்ட த த்தியை தானே சொல்லுறீங்க ?


நரேந்திர பாரதி
ஜன 13, 2024 03:52

மற்ற மத உணர்வுகளை புண்படுத்தும் நடிகர்/நடிகையர்களுக்கு இது ஒரு பாடமாய் இருக்கட்டும்


beindian
ஜன 13, 2024 10:11

அப்போ காஸ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி படமெல்லாம் உங்க லிஸ்ட்ல உள்ளதா ?


Suppan
ஜன 13, 2024 17:06

காஷ்மீர் பைல்ஸில் காட்டப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியும் உண்மையில் நடந்ததுதான். அப்பொழுது மத்திய உள்துறை அமைச்சர். இந்த விஷயங்கள் வெளிவராமல் / விவாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்ட கயவன்.அங்கிருந்து வெளிவந்து தில்லி போன்ற இடங்களில் அகதிகளாக கூடாரங்களில் தங்கி இருந்த பண்டித்துக்களை கேட்டுப் பாருங்கள். நான் அவர்களுடன் பழகி இருக்கிறேன்.


Bye Pass
ஜன 13, 2024 01:43

பால்டாயில் சில நேரங்களில் வேலை செய்யாம இருந்ததா ?


Ramesh Sargam
ஜன 13, 2024 00:31

ஒரு பிராமண குடும்பத்தை சேர்ந்த பெண்ணை கதாநாயகியாக காட்டி அப்பெண்ணெ அசைவம் சாப்பிடுவது போலும் அசைவ உணவு சமைப்பது போலும் காட்சி அமைக்கும் அளவிற்க்கு உள்ள அதே கருத்து சுதந்திரம்...... மாற்று மதத்தினரை சேர்ந்த ஒரு பெண்ணை கதாநாயகியாக காட்டி பன்றிக்கறி சமைப்பது போல் காட்சி அமைத்திருந்தால் இந்த கருத்து சுதந்திரம் அந்த படத்திற்கு இருக்குமா அந்த படம் வெளியாகியிருக்குமா❓


Senthoora
ஜன 13, 2024 07:45

முதலில் சென்சார் board இங்கு வழக்குப்போடுங்க, எப்படி விட்டாங்க என்று, கண்ணப்பநாயனார் சிவபெருமானுக்கே பன்றிக்கறி சமைத்துப்போட்டார் என்று சின்னவயதில் சமய பாடபுஸ்தகத்தில் படித்தோம், அதை வாபஸ் வாங்கலாமா? புஸ்தகத்தை ஏறிப்போமா? மதஉணர்வு எங்களுக்குள்ளே வளராமல் பார்த்தால் போதும், ராஜனியே இராமர் ஆண்டாள் என்ன, இராவணன் ஆண்டாள் என்ன என்று பாடியவர், இன்று அவருக்கு இராமர் கோவில் திறப்புவிழாவுக்கு அழைப்பு. சும்மாவா சொன்னார் கண்ணதாசன் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா நீ சாவுகி .....................


Durai Kuppusami
ஜன 13, 2024 10:41

பாட்டு தப்பா போடாதே ...ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் .......... நீயே கருத்த திரித்து போடாதே ....... இதை ஏன் வெளியிட்டீர் .....


குணா
ஜன 13, 2024 11:27

நல்லா தெரிஞ்சுக்கோங்க நம்பிக்கையின் அடிப்படையில் சுயமா சிந்திச்சு வாழ்றவங்க.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ