உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் அதிகாரியிடம் சில்மிஷம் சக வன அதிகாரி மீது வழக்கு

பெண் அதிகாரியிடம் சில்மிஷம் சக வன அதிகாரி மீது வழக்கு

திருவனந்தபுரம்:வயநாட்டில், பெண் அதிகாரியை பலாத்காரம் செய்ய முயன்ற சக வன அதிகாரி மீது வழக்கு பதியப்பட்டது. கேரள மாநிலம், வயநாடு அருகே சுகந்தகிரி பிரிவு வன அலுவலகத்தில், பீட் வன அதிகாரியாக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இரு தினங்களுக்கு முன் அவர் அலுவலக இரவு பணியில் இருந்தபோது, அவரது அறைக்குள் சென்ற பிரிவு வன அதிகாரி ரத்தீஷ், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. பெண் அதிகாரி படிஞ்சரத்தரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், ரத்தீஷ் மீது வழக்கு பதிந்தனர். ரத்தீஷ், கல்பெட்டா ரேஞ்ச் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். அவர் மீது, துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ