உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளம் பெண்களுக்கு தொல்லை காங்.,எம்.எல்.ஏ., மீது வழக்கு

இளம் பெண்களுக்கு தொல்லை காங்.,எம்.எல்.ஏ., மீது வழக்கு

திருவனந்தபுரம்: சமூக ஊடகங்களில் இளம்பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறி பாலக்காடு காங்., எம்.எல்.ஏ. ராகுல் மாங்கூட்டத்தில் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலக்காடு தொகுதி காங்., எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். இவர் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். சமூக ஊடகங்கள் மூலம் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாக மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் புகார் கூறினார். இதைத்தொடர்ந்து வேறு சில இளம்பெண்களும் ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக புகார் கூறினர். இதில் ஒரு பெண்ணிற்கு கருக்கலைப்புக்கு வற்புறுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து ராகுல் மாங்கூட்டத்திலை கண்டித்து கேரளா முழுவதும் போராட்டம் வலுத்தது. எம்.எல்.ஏ., மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்யக்கோரி கம்யூ., பா.ஜ., வினர் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து ராகுல் மாங்கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவர் மீது சமூக ஊடகங்களில் பெண்களை பின்தொடர்ந்து துன்புறுத்துதல், மன உளைச்சலை ஏற்படுத்தியது, கட்டாய கருக்கலைப்பு செய்யத் தூண்டியது, அச்சுறுத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை