உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் உட்பட 29 பேர் மீது வழக்கு பதிவு

விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் உட்பட 29 பேர் மீது வழக்கு பதிவு

ஹைதராபாத்: சட்டவிரோத, 'ஆன்லைன்' சூதாட்ட செயலிகள் விளம்பரத்தில் நடித்த புகார் தொடர்பாக, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.'ஜங்லீ ரம்மி, ஜீட்வின், லோட்டஸ் 365' உள்ளிட்ட, 'ஆன்லைன்' சூதாட்ட செயலிகள் வாயிலாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. அதிக ஊதியம்இந்த நிறுவனங்கள் திரைப்பட நட்சத்திரங்கள், இன்ஸ்டா, யு டியூப் பிரபலங்களை வைத்து விளம்பரப்படுத்தி, சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்டம் வாயிலாக கோடிக்கணக்கான ரூபாய் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.மேலும், விளம்பரத்தில் பிரபல நடிகர்கள் நடித்ததை நம்பி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கோடிக்கணக்கான ரூபாயை இழந்ததாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் சூதாட்ட செயலிகளால் கிடைத்த வருவாயில், நடிகர்களுக்கு அதிக தொகை ஊதியமாக கொடுக்கப்பட்டதாக தெலுங்கானாவைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்தர சர்மா என்பவரும் புகார் அளித்திருந்தார்.இதைத் தொடர்ந்து தெலுங்கானா கேமிங் சட்டப்பிரிவின்படி, நடிகர்களான விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, நடிகையர் மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், பிரணிதா சுபாஷ், அனன்யா நாகெல்லா மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் என 29 பேர் மீது, சைபராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் மோசடி செய்யப்பட்ட தொகை எவ்வளவு, அதில் நடிகர்களுக்கு எவ்வளவு தொகை கமிஷனாக வழங்கப்பட்டது என வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய, அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளது. நடிகர்கள் மறுப்புஆனால் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட, திறன் சார்ந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தம் போட்டதாக, விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். இதேபோன்று, கேமிங் செயலியுடனான தங்கள் ஒப்பந்தம், 2017ல் முடிந்துவிட்டதாகவும், பின்னர் அது நீட்டிக்கப்படவில்லை என்றும் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை