உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி வீட்டில் பண மூட்டை கிடந்த விவகாரம்; பார்லியில் கண்டன தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு ஏற்பாடு

நீதிபதி வீட்டில் பண மூட்டை கிடந்த விவகாரம்; பார்லியில் கண்டன தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மார்ச் 14ம் தேதி நீதிபதி வர்மாவின் டில்லி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவின் முதற்கட்ட விசாரணை முடிவில், நீதிபதி வர்மாவை நீதித்துறை பணியில் இருந்து நீக்குதல், அலகாபாத் ஐகோர்ட்டிற்கு இடமாற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த குற்றச்சாட்டிற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுப்பு தெரிவித்தார். நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு, அமைக்கப்பட்டது.இந்த குழு மே 4ம் தனது அறிக்கையை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தது. இந்த விசாரணை அறிக்கை பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான கண்டன தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு தீர்மானம் கொண்டு வரும்.இவ்வாறு கண்டன தீர்மானம் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

c.mohanraj raj
மே 28, 2025 21:16

தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் அவர்கள் மேல் எஃப் ஐ ஆர் கூட போடக்கூடாது என்றால் என்ன அர்த்தம் நூறு ரூபாய் திருடுறவன் கேனையும் இவர்கள் எல்லாம் அதிமேதாவிகள் அப்படித்தானே சட்ட திருத்தம் வேண்டும் கொலை செய்யும் ஒழிக்கப்பட வேண்டும்


Ramalingam Shanmugam
மே 28, 2025 17:14

யோக்கிய சிகாமணி போல் பேசுறாங்க


SP
மே 28, 2025 15:06

முதலில் கொலீஜியம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். அதற்கும் நடவடிக்கை உடனடி தேவை.


Rengaraj
மே 28, 2025 11:57

இந்த நீதிபதி மாதிரி எத்தனையோ பேர் நம் நாட்டில் இருப்பார்கள் . வெவ்வேறு காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியிருப்பர். நீதிபதிகளை மிரட்டிக்கூட தீர்ப்புகள் வாங்கப்பட்டிருக்கும். அவை வழக்கில் பாதிக்கப்பட்ட ஒரு சாராருக்கு அநீதியாக கூட இருந்திருக்கும். எனவே நீதிபதிகள் விஷயத்தில் நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கமுடியாது. உச்சநீதிமன்றம் மட்டுமே நீதிபதிகள் விஷயத்தில் தகுந்த வழிகாட்டுதலை தர முடியும். தவறு இழைத்த நீதிபதி என்றால் அவருக்கு தகுந்த தண்டனை வழங்க அதிக பட்ச அதிகாரங்கள் கொண்ட அமைப்பாக உச்சநீதிமன்றம் மாறவேண்டும். அதற்கு தேவையான சட்டதிருத்தங்களை மத்திய அரசு கொண்டுவரவேண்டும். குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தவறு செய்கிறார் என்றால் அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு மக்கள் மன்றத்தில் உச்ச நீதிமன்றமே அறிக்கை அளித்து தண்டனையின் பொது வெளியில் விவரங்களை வெளியிடவேண்டும். அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தல்கள் இருந்தால் முறைப்படி அதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் முழுஉரிமையையும் அந்த நீதிபதிக்கு தரவேண்டும். அப்போதுதான் நீதிபதிகள் மிகுந்த சுதந்திரத்துடன் தங்கள் கடமையை செய்யமுடியும்.


மே 28, 2025 11:13

இப்பொழுது நமது கட்டுமரம் முதல்வராக இருந்திருந்தால் அத்துணை பணத்தையும் சுட்டிருப்பார் ...


Anand
மே 28, 2025 11:02

திருட்டு திராவிஷம் தொடரும் அணைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதும் தடை வழங்குவதும் ஏனோ?


Anbuselvan
மே 28, 2025 10:36

How can he be allowed to continue his judge position. Atleast, he should have been suspended or asked to go on leave, Instead he was transferred - appears ridiculous. He should be impeached first in parliament and punished by court immediately. Blatant truth already came out.


நிவேதா
மே 28, 2025 10:20

சட்டத்தில் இடமுண்டு. நீதிபதி கர்ணன் வழக்கை படித்து பார்க்கவும்.


Shekar
மே 28, 2025 10:19

அட போங்கய்யா ....இப்படிப்பட்ட நீதிமான்கள் மத்தியில், 2G ராசா, 10 ரூபா பாலாஜி, 30,000 கோடி சின்னவர், துபாய்க்கு காணாமல் போன அவர் தம்பி, தயா, பாலு, தங்கமுடி, நான் அவனில்லை அமைச்சர், கோவில் ஸ்வாகா பாபு, நேஷனல் ஹெரால்ட் தங்க தாய், அவர் மகன் இவங்களுக்கு ராஜா மரியாதைதான். தண்டனை கிடைக்கும் அப்படின்னு எதிர்பார்க்கும் நாம் இழிச்சவாயர்கள்


நிவேதா
மே 28, 2025 10:13

உச்சநீதி மன்றத்தை அவமதித்ததாக அப்போதைய உயர் நீதி மன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் தண்டிக்கப்பட்டார். இன்று ஊழல் லஞ்சம் காரணத்துக்காக இந்த நீதிபதியை உச்சமன்றத்தால் தண்டிக்க முடியவில்லை என கூறுவதே அசிங்கம். அவர்களுக்கு எதிராக நடந்தால் கவுரவ பிரச்சனை, அவர்களுக்கு பாதிப்பு இல்லை எனில் அலட்சியம்


சேகர்
மே 28, 2025 11:23

yes. The same supreme court ordered to file FIR on justice Karnan and imposed 6 months imprisonment to him


புதிய வீடியோ