உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் நிலவும் ஜாதிய பாகுபாடு மோசம்: சொல்கிறார் ராகுல்

இந்தியாவில் நிலவும் ஜாதிய பாகுபாடு மோசம்: சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: '' இந்தியாவில் நிலவும் ஜாதிய பாகுபாடு உலகிலேயே மிகவும் மோசமானது,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நாடு முழுதும் ஜாதி ரீதியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதன் மூலம், அனைவருக்கும் சரிசமமான இட ஒதுக்கீட்டை வழங்க முடியும் என்பதுடன், உண்மையில் யார் ஏழைகளாக உள்ளனர். அவர்களின் சதவீதம் எத்தனை என்பது தெரிய வரும் என வலியுறுத்துகிறார். இதன் மூலம், இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க முடியும் என காங்கிரஸ் நம்புகிறது.இந்நிலையில், அக்கட்சி ஆட்சி செய்யும் தெலுங்கானா மாநிலத்தில் ஜாதி ரீதியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. நாளை முதல் இம்மாத இறுதி வரை இப்பணி நடைபெறுகிறது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு தெலுங்கானா மாநில காங்கிரஸ் ஏற்பாடு செய்து இருந்தது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே, ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அவர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: இந்தியாவில் நிலவும் ஜாதிய பாகுபாடு உலகிலேயே மிகவும் மோசமானதாக உள்ளது. இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் இலக்கு என்பதை காங்கிரஸ் அகற்றும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

sankar
நவ 07, 2024 09:52

ஆமாம் சார் - இப்ப உடனடியாக தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சினை இதுதான் - அறுபது வருடம் என்ன செய்தாய் என்று யாரும் கேட்கக்கூடாது -


ஆரூர் ரங்
நவ 06, 2024 14:37

காந்தியை தென்னாப்பிரிக்க ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டது தீண்டாமை படிநிலைதானே? இன்றுவரை உங்க கத்தோலிக்க போப்பாக ஒரு ஆசியர் ஆப்பிரிக்கர் வர முடிந்ததா? சாதீய படிநிலை உலகம் முழுவதும் வெவ்வேறு பரிமாணங்களில் உள்ளதுதான். உங்க அன்னிய நாக்கு இந்தியாவை தரக்குறைவாக மட்டுமே பேசும்.


Anand
நவ 06, 2024 14:03

நீதாண் ஜாதிவெறியை தூண்டிக்கொண்டு குளிர் காய்கிறாய்...........


Sridhar
நவ 06, 2024 13:58

ஜாதி பாகுபாடு உலகெங்கிலும் வேறுவேறு வடிவங்களில் இருக்கிறது என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு பார்த்தால்கூட, இவனுக ஆட்சிதானே 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் நடந்துகொண்டிருந்தது? அப்போ இந்த பிரச்னையை சரிசெய்ய என்னத்த இவனுக கிழிச்சானுகளாம்? தேர்தல்ல வேற பொய்களை சொல்லி ஜெயிக்க முடியல அதுனால சமூக பிளவுகளை வெள்ளைக்காரனைப்போல் பெரிது படுத்தி அதில் குளிர்காயலாம்னு நினைக்கிற இந்த மாதிரி கேடுகெட்ட அரசியல்வாதிகள் இருக்கறவரை இந்தியா முன்னேறறது கஷ்டம்தான்


Madras Madra
நவ 06, 2024 12:43

ராகுல் அவர்களே முதலில் இந்த நாட்டின்பல பிரச்சினைகளுக்கு காங்கிரஸ்சின் பொறுப்பு இன்னும் இருக்கிறது என்பதை உணருங்கள் நீங்கள் போட்ட அடித்தளம் மேலே தான் இன்றைய அரசும் நிற்கிறது ஏதோ எல்லாம் கடந்த 10 வருட பிரச்சினை போல பேசாதீர்கள்


நிக்கோல்தாம்சன்
நவ 06, 2024 12:23

ஜாதி போயி மதம் வந்தது டும்டும் என்பது கூட தெரியாத ஒரு அப்பாவி நேபோட்டிஸ மன்னர் ராகுல்


ram
நவ 06, 2024 11:55

இவர் சார்ந்த மதத்தில் அன்பு அமைதி இருக்கும் ஜாதிய பாகுபாடை முதலில் நீக்கி விட்டு ஹிந்துக்களை பத்தி பேசினால் நன்றாக இருக்கும். என்னமோ ஹிந்து மதத்தில் மட்டும் தான் ஜாதி பாகுபாடு இருக்குது என்று நன்றாக கம்பி கட்டுகிறார்.


Mettai* Tamil
நவ 06, 2024 09:51

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால், ஜாதிய பாகுபாடு அதிகமாகத்தான் செய்யும் .....


Sampath Kumar
நவ 06, 2024 09:39

கருது சொன்ன ராகுல் உண்மையை ஏடுத்து கூறி உள்ளார் அதற்கு அசோக் நல்ல பதிலையும் அதற்கு நேர் மறக்க ஒரு சாங்கி எதிர் கருத்தையும் பதிவிட்டு ராகுலின் பேசுகுக்கு கட்டியம் கூறி இருக்கின்ற விதத்தில் இருந்தே புரிந்து கொள்ளலாம் இந்துமதத்தின் சாதீயய பாகுபாட்டை இதை ஆரம்பித்து வைத்ததை புண்ணியவான்கள் தான் இந்த ஆர்யா கும்பல் அவர்கள் வாய்த்த தீ முற்றாக பற்றி கொண்டு உள்ளது சமூகத்தை அதை நையாமல் காக்கும் முயரிசில் தான் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் போன்ற அமபைப்புகள் வாழ்க பாரதம் ????


hari
நவ 06, 2024 10:42

தமிழை கொலை செய்து ஏதோ சொல்ல வருகிறார்


கல்யாணராமன் சு.
நவ 06, 2024 11:44

\தமிழை கொலை செய்து ஏதோ சொல்ல வருகிறார்\ .... அவர் ஒண்ணும் சொல்லவரலை .... தமிழை கொலை செய்ய மட்டுமே வந்திருக்கிறார் . ... ரொம்ப நாளா இதைத்தான் செஞ்சுக்கிட்டிருக்கார் . ...


ஆரூர் ரங்
நவ 06, 2024 16:35

தமிழுக்கும் குண்டு வைக்கலாமா? பாவம் விட்டுடுங்க.


Dharmavaan
நவ 06, 2024 09:09

ராகுல்கான் ஹிந்து அல்ல இவன் ஒரு முஸ்லீம் கிருஸ்துவ கலப்படம்... ஹிந்துக்களை ஜாதி முறையின் பிளவுபடுத்த இந்த சதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை