உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்திற்கு 5.367 டி.எம்.சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு

தமிழகத்திற்கு 5.367 டி.எம்.சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.'தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி காவிரி நீரை திறக்க வேண்டும். ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி நீரையும் உரிய நேரத்தில் திறந்துவிட வேண்டும்' என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankaranarayanan
ஜூன் 25, 2024 21:41

ஆணையை யார் கேட்கிறார்கள்? யார் மதிக்கிறார்கள் ? எப்போது இந்த ஆணை நடந்தேறியுள்ளது ?


Krishna Gurumoorthy
ஜூன் 25, 2024 21:36

வரும் ஆனால் நிக்காது


rama adhavan
ஜூன் 25, 2024 21:05

இந்த ஆணை சர்க்கரை என பேப்பரில் எழுதியது போல் தான். நிஜ சர்க்கரை ஆகாது. இனிக்கவும் இனிக்காது.


தாமரை மலர்கிறது
ஜூன் 25, 2024 20:11

திறக்கப்படும் தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகிவிடும் ஆபத்துள்ளது.


Indian
ஜூன் 25, 2024 18:42

வரும் ......ஆனா வராது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை