உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.17 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

ரூ.17 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்ததமான இடங்களில் இன்று (ஆகஸ்ட் 23) சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்து விட்டதாக இரண்டு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் மும்பை மற்றும் டில்லியில், அனில் அம்பானிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.பின்னர் நேரில் ஆஜராகியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 23) இந்த வழக்கு தொடர்பாக, அனில் அம்பானிக்கு சொந்ததமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மும்பை, டில்லி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Arul Jeevaraj
ஆக 23, 2025 19:59

CBI: ஹலோ அணில் ஜி , இப்போ நாங்க ரெய்டுக்கு வரலாமா ஜி ? உங்களுக்கு நாங்க கொடுத்த இத்தனை வருஷங்கள் போதுமா? நாங்க செக் பண்றதுக்குன்னு ஏதாவது கொஞ்சம் டாகுமெண்ட்ஸ் எடுத்து வைங்க ஜி. ANIL AMBANI: ஒகே ப்ரோ. நீங்க இப்ப வரலாம். உங்க ரெய்டுக்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யணுமோ செஞ்சுட்டேன். என்னால மத்திய அரசுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது.


ராஜா
ஆக 23, 2025 15:41

இதெல்லாம் ரொம்ப சகஜமா இருக்கே பரவாயில்லை நயனா


Priyan Vadanad
ஆக 23, 2025 15:24

அதெல்லாம் சும்மா. சிபிஐ எல்லோரையும் சமமாக நடத்துகிறதாம்.


Tamilan
ஆக 23, 2025 15:21

அம்பானிக்கும் அத்தானிக்கும் இருக்கும் மதவாத அரசின் ஆதரவு இவருக்கு இல்லாமல் போனது ஏன்?


Tamilan
ஆக 23, 2025 15:20

அண்ணன் அம்பானியிடமும் மோடியின் நண்பர் அதானியிடமும் நாட்டில் கொள்ளையடித்த பணம் பல லச்சக்கணக்கான கொடிகள் உள்ளது . அதிலிருந்து கொஞ்சம் இரவல் வாங்கி வந்திவிடவேண்டியதுதானே ?


கனோஜ் ஆங்ரே
ஆக 23, 2025 15:03

அனில் அம்பானி... என்னய்யா, பொழக்க தெரியாத ஆளா இருக்குறியே... உடனே கட்சியில சேர்ந்துடுய்யா...?


Nava
ஆக 23, 2025 16:22

பாலாஜி போலவா


V. SRINIVASAN
ஆக 23, 2025 14:18

பாவம் அணில் அம்பானி கடந்து தவியா தவிக்கிறான் அவர் அண்ணன் முகேஷ் அம்பானி கொடி கட்டி பறக்கிறான் தம்பி சிபிஐ அமுலாக்கத்துறை இடம் மாட்டி சிரிப்பா சிரிக்க போறான்


suresh guptha
ஆக 23, 2025 13:17

IT IS EYE WASH,IF C B I WANTS ,THIS STEP MIGHT TAKEN WELL IN ADVANCE


Santhakumar Srinivasalu
ஆக 23, 2025 13:00

முகேஷ் அம்பானி மனது வைத்தால் தனது சகோதரரை மட்டுமில்ல அவரது நிறுவனங்களையும் காப்பாற்றி அம்பானி என்கிற புகழையும் மீட்கலாம்!


சமீபத்திய செய்தி