உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாயம்: புது வழிமுறைகளை வெளியிட்டது ரயில்வே

ரயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாயம்: புது வழிமுறைகளை வெளியிட்டது ரயில்வே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, ரயில்வே கேட்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை ரயில்வேத்துறை வெளியிட்டு உள்ளது.கடலுார் அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பாசஞ்சர் ரயில், பள்ளி வேன் மீது மோதியதில் 3 மாணவர்கள் 2 மாணவர்கள், ஒரு மாணவி என மொத்தம் 3 பேர் இறந்தனர். விபத்தில், படுகாயடைந்த 10ம் வகுப்பு மாணவர் விஸ்வேஸ் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில், ரயில்வே கேட்களில் பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகளை ரயில்வேத்துறை வெளியிட்டுள்ளது.இதன்படி,* அனைத்து ரயில்வே கேட் மற்றும் கேட் கீப்பர் அறைகளிலும் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது கட்டாயம்*ரயில் வாகன போக்குவரத்து 10,000க்கு மேல் உள்ள ரயில்வே கேட்களில் தானியங்கி இண்டர்லாக் அமைப்பு பொருத்த வேண்டும்.*இண்டர்லாக்கிங் இல்லாத கேட்களில் கேட் கீப்பர், ஸ்டேசன் மாஸ்டரின் குரல் பதிவுகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.*கூடுமானவரை அனைத்து இடங்களிலும் இன்டர்லாக் பொருத்த வேண்டும்*ரயில்வே கேட் அருகில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்*லெவல் கிராசிங்கில் இண்டர்லாக்கிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.*இண்டர்லாக்கிங் கட்டுமான பணிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தலாம்*அனைத்து ரயில்வே கேட்களை 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RanganathanS
ஜூலை 10, 2025 07:20

பாதுகாப்பு இண்டர்லாகிங், அலாரம், சிவப்பு சிக்னல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். கேட் கீப்பர், கண்காணிப்பார் இருவர் போட வேண்டும். மக்கள் அவர்களுக்கு மரியாதை தர வேண்டும். சில கேட்களில் ரயில் வருவதற்கு வெகு நேரம் முன்னரே மூடிவிடுகிறார்கள்.


Kasimani Baskaran
ஜூலை 10, 2025 04:05

கேட் மூடுவதற்குள் கடந்துவிடவேண்டும் என்ற பள்ளி வேண் டிரைவர் முனைந்ததை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. பிள்ளைகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கவேண்டியது தனது பொறுப்பு என்பதை உணராத ஓட்டுநர்தான் அடிப்படை பிரச்சினை. கண்டிப்பாக மறைவிடத்தில் இருந்து ரயில் உடனே வந்தது என்றெல்லாம் சொல்லவே முடியாது. மேம்பாலம் அமைத்து இருக்கலாம் - அல்லது சுரங்கப்பாதை அமைத்து இருக்கலாம் - ஆனால் அதற்க்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று சொல்லப்படுவதையும் ஆராயவேண்டும்.


R Dhasarathan
ஜூலை 10, 2025 00:29

3 இளம் தளிர்களின் உயிர் போச்சு, இன்டர் லாக் தான் முதலில் செய்ய வேண்டியது.... இவர்கள் எல்லாம் எங்கே என்ன படித்து வந்தார்கள் என்று தெரியவில்லை.... நாட்டிற்கு பாரமாக இவர்கள் இருந்து வருகிறார்கள்


Anantharaman Srinivasan
ஜூலை 09, 2025 23:23

கடலூரில் accident ஆகி மரணம் ஏற்பட்ட பின் "கேட்கீப்பரை போல்" விழித்துக்கொண்டுள்ளது ரயில்வே நிர்வாகம். ரயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாயம்: புது வழிமுறைகளை வெளியிட்டது ரயில்வே துறை.


முக்கிய வீடியோ