உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய நேரடி வரி வசூல் ரூ.5.74 லட்சம் கோடி

மத்திய நேரடி வரி வசூல் ரூ.5.74 லட்சம் கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் மத்திய நிகர நேரடி வரி வசூல் ரூ.5.74 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து சி.பி.டிடி எனப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நடப்பு நிதியாண்டான 2024-25 ம் ஆண்டில் ஏப்.01-ம் தேதி முதல் ஜூலை 11-ம் தேதி வரையிலான ஆண்டில் மத்திய நிகர நேரடி வரியாக ரூ.5 லட்சத்து 74 ஆயிரத்து 357 கோடி வசூலாகியுள்ளது. இது 20 சதவீத வளர்ச்சி ஆகும்.அதே நேரம் கார்ப்பரேட் வரியாக ரூ. 2 லட்சத்து 10 ஆயிரத்து 274 கோடி வசூலாகியுள்ளது. இது 12.5 சதவீத வளர்ச்சி ஆகும். தனிநபர் வருமானம் மற்றும் செக்யூரிட்டி பரிவர்த்தனை வாயிலாக ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 36 கோடி வசூலாகியுள்ளது. இது 24 சதவீதம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venugopal s
ஜூலை 13, 2024 22:38

இதில் தமிழகத்தில் இருந்து ஆட்டையைப் போட்டது எவ்வளவு?


GMM
ஜூலை 13, 2024 21:24

வருமான வரி போன்ற நேரடி வரி செலுத்தும் தகுதி வந்தவுடன் ஒவ்வொரு பரிவர்த்தனையில் பணம் அரசு கணக்கில் சேர வேண்டும். நேரடி வரி செலுத்தும் குடிமக்களுக்கு அரசு, நீதி, நிர்வாக தேவையில் முன்னுரிமை தர வேண்டும். GST போன்ற மறைமுக வரியில் பிடிக்கப்படும் தொகை உடன் கம்ப்யூட்டர் வழியே அரசு கணக்கில் வரவு வைக்க வேண்டும். Invoice, estimation, Tax Bill.. தயாரிக்கும் போது, எதுவாக இருந்தாலும் அரசு கணக்கில் வரவு வைக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள், கட்சிகள், கல்வி, மருத்துவம்.. எதற்கும் வரி விலக்கு கூடாது. இலவசம் கூடாது. கடன் திரும்ப செலுத்த, அபிவிருத்தி பணிகளுக்கு மட்டும் வரி பணம் பயன்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை