உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு!

மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. தமிழகத்திற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நிதி கமிஷனின் பரிந்துரையின்படி, வரி வருவாயில் மத்திய, மாநில அரசுகள் பகிரும் நடைமுறை அரசியல் சட்டப்படி அமலில் இருக்கிறது. குறிப்பிட்ட சில வரி வருவாயை நியாயமான மற்றும் சமமான அளவில் மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வது வழக்கம்.அந்த வகையில், மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. தமிழகத்திற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்கூட்டியே தவணை தொகையை விடுவித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீஹாருக்கு ரூ.10,219 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.7,976 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.7,644 கோடியும், மஹாராஷ்டிராவுக்கு ரூ.6,418 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.6,123 கோடியும் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Santhakumar Srinivasalu
அக் 02, 2025 20:38

ஜிஎஸ்டி அதிகம் வசூலித்த மாநிலம் த நா. அப்ப ஏன் ஒதுக்கீடு குறைவு?


Santhakumar Srinivasalu
அக் 02, 2025 20:36

அதென்ன கணக்கு? உபிக்கு ₹18000/- தமிழ் நாட்டுக்கு ₹4000/- மிதமிஞ்சிய துரோக ஓர வஞ்சனை!


Kulandai kannan
அக் 02, 2025 15:58

தமிழ்நாட்டில் ஏ வ்.....


ஆரூர் ரங்
அக் 02, 2025 15:05

மக்களுக்கு அல்வா.


Venkataraman Balasubramaniam
அக் 02, 2025 09:02

நிதி குழுவின் பரிந்துரைகள் மீதுதான் நிதி வழங்கப்படுகிறது. சும்மா மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு வாரி வழங்குகிறது என்று ஒப்பாரி வைப்பதே இங்கு உள்ள அரசுக்கு பொழுது போக்கு


Gokul Krishnan
அக் 02, 2025 08:57

சரி இனியாவது பீகாரில் புதிய பாலங்கள் கட்டி முடித்தவுடன் இடிந்து விழாமல் இருக்குமா


vivek
அக் 02, 2025 09:33

இங்கே நடந்தது அங்கே நடக்காது...வீணா சொம்பு தூக்காதே


Gokul Krishnan
அக் 02, 2025 10:46

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடாது


sankaranarayanan
அக் 02, 2025 08:01

தமிழகத்திற்குத்தான் சாராயத்தண்ணீர் கை கொடுக்கிறதே அதுவே போதும் அதுவே மித மிஞ்சி இருக்கிறது தள்ளாடும் தமிழகத்திற்கு சாராயம் ஒரு வரப்பிரசாதம்


Indian
அக் 01, 2025 23:23

எல்லா பணமும் உபி , பீகார் கு கொடுத்து விட்டு தமிழ் நாட்டுக்கு ஒரு ஐம்பது ரூபா கொடுங்க போதும்.


vivek
அக் 02, 2025 05:59

ஆமாம் அந்த ஐம்பதை ஆட்டைய போட்டுடுவோம் கைலாசம்


தாமரை மலர்கிறது
அக் 01, 2025 22:43

தமிழகத்திற்கு ஆயிரம் கோடி கொடுத்தாலே போதும். அதிகம் கொடுத்தால் ஊழல் செய்யப்படும்.


உண்மை கசக்கும்
அக் 01, 2025 22:36

தமிழக அரசு, மாவட்ட நிதி ஒதுக்கீடு பற்றி ஒரு அறிக்கை கொடுக்க முடியுமா.


சமீபத்திய செய்தி