உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., நடிகர் நடித்த பாலிவுட் படத்திற்கு தடை: மத்திய அரசு முடிவு

பாக்., நடிகர் நடித்த பாலிவுட் படத்திற்கு தடை: மத்திய அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் நடித்த பாலிவுட் படத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் பாவத் கான் நடிப்பில் ' அபிர் குலாய்' என்ற ஹிந்திப்படம் தயாராகி உள்ளது. விவேக் அகர்வால் தயாரித்த இந்த படத்தை ஆர்த்தி எஸ் பகதி என்பவர் இயக்கி உள்ளார். வாணி கபூரும் இந்த படத்தில் நடித்து உள்ள இப்படம் மே 9 ம் தேதி திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால், இந்தியா பாகிஸ்தான் இடையில் உள்ள உறவு மோசமாக உள்ள காரணத்தினால், இப்படத்தை வெளியிடுவதற்கு மஹாராஷ்டிராவில் ராஜ் தாக்கரேயின் நவநிர்மான் சேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.தற்போது, பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். நாட்டு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் உள்ளனர். இதனால், அந்நாட்டு நடிகர் பாவத் கான் நடிப்பில் தயாராகி உள்ள படத்தை புறக்கணிக்க வேண்டும் என மேற்கு இந்திய சினிமா கூட்டமைப்பு சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் வலியுறுத்த துவங்கி உள்ளன. இதனையடுத்து இப்படத்தை வெளியிடுவதில் சினிமா அரங்குகள் தயக்கம் காட்டி வருகின்றன. பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழ்நிலையில், இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ganapathy
ஏப் 24, 2025 22:39

கிறிஸ்தவ ஓட்டுக்காக ஆங்கில படங்களை தடை செய்தவர் கருணாநிதி. முஸ்லீம் ஓட்டுக்காக புத்தகங்களை தடை செய்தனர் காந்திகளும் நேருவும்..இங்கு ஹிந்துவாக பிறந்த ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்டவர்களின் மனவலியை உணர்ந்துள்ள எந்த மனிதாபிமான அரசும் இனி பாக்கிஸ்தானை ஒவ்வொரு துறையிலும் தடை செய்யும். கலைஞர்கள் விளையாட்டு வீரர்கள் என பலவிதமான போர்வைகளில் பாகிஸ்தானிய பொருளாதாரத்துக்கு உதவத் துடிக்கும் தேச துரோக மனித மிருகங்கள் நாட்டைவிட்டு பாக்., குடியுரிமை வாங்கிகிட்டு வெளியேறட்டும்


RAMAKRISHNAN NATESAN
ஏப் 24, 2025 21:52

கிரிக்கெட் விளையாடுவது மட்டும் என்னத்துக்கு ?


தாமரை மலர்கிறது
ஏப் 24, 2025 21:10

எதிரிகளிடம் சோரம் போவதுபோல் இன்னும் எத்தனை படங்கள் வேண்டும்? பாலிவுட் தயாரிப்பாளர்கள் திருந்தவேண்டும். இல்லையெனில் திருத்தப்படுவார்கள்.


Shankar
ஏப் 24, 2025 20:42

நம்நாட்டில் நடிகர்களே இல்லையா என்ன? பன்றிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்த டைரக்டரையும் கைது செய்யவேண்டும். அப்பொழுது தான் அடுத்தவன் இந்த தவறை செய்யமாட்டான்.


Padmasridharan
ஏப் 24, 2025 19:50

இந்த நடிகர் பயங்கரவாதி இல்லையே. ஆனாலும் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானை/மக்களை எதிர்க்கிறார்கள். இதுபோல்தான் மொழி எதிர்ப்பும். முதலில் உள்ளே நுழையும், பின்பு சுயரூபம் எடுக்கும். அதனால்தான் மொழிக்கொள்கைகளை கல்விக்கூடத்தில் திணிக்கவேண்டாம் என்கிறார்கள்.


N Sasikumar Yadhav
ஏப் 24, 2025 21:54

ஆஹா அற்புதமான இசுலாமிய பயங்கரவாத இசுலாமிய கேவலமான முட்டு உங்களுடையது . மொழி பாரதநாட்டு மொழி ஆனால் பயங்கரவாதம் பாகிஸ்தானிய இசுலாமிய பயங்கரவாதம் எதை எதனோடு முடிச்சு போடுகிறீர் . ஒருவேளை கோபாலபுர கொத்தடிமைகள் இப்படித்தான் கேவலமாக யோசிப்பார்களோ


vivek
ஏப் 25, 2025 05:53

உமக்கு சமச்சீர் கல்வியே அதிகம் ஓய்


அப்பாவி
ஏப் 24, 2025 19:44

கிரிக்கெட்டை இழுத்து மூடுங்க.


Karthik
ஏப் 24, 2025 19:41

இத்திரைப்படம் இந்தியாவில் எந்த மூலையிலும் திரையிடப்படக்கூடாது.


சமீபத்திய செய்தி