உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு புது திட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு புது திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம்(கிராமப்புறம்) (VB G RAM G)' மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் வேலைநாட்கள் 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக ' வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) ' என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த 12 ம் தேதி ஒப்புதல் அளித்த நிலையில், பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8z1zjgpy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனையடுத்து, அனைத்து எம்பிக்களும் பார்லிமென்டிற்கு வர வேண்டும் என பாஜ கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய மசோதாவில் அம்சங்கள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதாப்படி வேலை நாட்களின் எண்ணிக்கை 100 ல் இருந்து 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.பழைய திட்டத்தின்படி மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், புதிய திட்டத்தில், மாநில அரசுகளும் நிதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசுக்கும், இமயமலை மாநிலங்கள், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஜம்மு காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் நிதிப் பகிர்வு 90:10 ஆகவும், சட்டசபை கொண்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 60:40 ஆகவும் இருக்கும். சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசங்களில் ஆகும் மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1.51 லட்சம் கோடி செலவாகும் நிலையில், மத்திய அரசு ரூ.95,692 கோடி வழங்க உள்ளது.நீர் பாதுகாப்பு, ஊரக கட்டமைப்பு, வாழ்வாதார உள்கட்டமைப்பு உள்ளிட்ட நான்கு வகைகளில் பணிகள் ஒதுக்கப்படும். அதேநேரத்தில், விவசாயப் பணிகள் உச்சத்தில் இருக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அந்த காலகட்டத்தில் இந்தப் பணிகள் துவங்கப்படவோ அல்லது செயல்படுத்தக்கூடாது. இதற்கான அறிவிப்பை 60 நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு வெளியிட வேண்டும்.பணி முடிந்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால் வேலையின்மைக்கான படி வழங்கப்பட வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி பிரியங்கா, மஹாத்மா காந்தியின்பெயரை நீக்குவது ஏன்? இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். பெயர் மாற்றம்போது எல்லாம் அதிக செலவாகும். இந்த மாற்றத்துக்கான நோக்கம் என்னவென புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

வேலைக்காரன்
டிச 16, 2025 12:38

புதுதிட்டம். புது உருவல். ரெண்டு கோடி வேலை என்னாச்சு? பத்து வருஷமா குடுத்திருந்தால் 20 கோடி பேர் வேலைக்கு போயிருப்பாங்களே?


MUTHU
டிச 15, 2025 21:20

முதலில் மக்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த திட்டம் ஒன்றும் பாமரனுக்கு நல்லது செய்ய வந்தது அல்ல. இந்தியாவினை தொழில் மயமாக்க நடவடிக்கை எடுக்கும்பொழுது விவசாயின் நிலம் வரையறை இன்றி பிடுங்கப்பட்டது. அவர்களுக்கு சொற்ப விலைமட்டுமே கிடைத்தது. அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டது. தொழில் மயம் சில நகரங்களில் குவிக்கப்பட்டது. வேறு வேலை தெரியாத நடுத்தர மற்றும் மிகவும் வயதான விவசாய கூலிகள் வேலைக்கு எங்கே செல்வார்கள். ஆண்களுக்கும் இணையாக பெண்கள் இங்கே விவசாயம் அது சார்ந்த கால்நடை வளர்ப்பும் செய்தனர். சுய சார்புடன் வாழ்ந்தனர். அதுவெல்லாம் சுமார் பத்தாண்டுகளிலேயே முற்றிலும் அழிந்து விட்டது. நாட்டின் சுயசார்பு சிங் மற்றும் அவரின் ஊழல் மந்திரிகளால் முற்றிலும் மாறிவிட்டது. அவர்களின் அவலம் மற்றும் கூக்குரல் வெளிவராமல் தடுக்க காங்கிரஸ் அரசின் குறுக்கு மூலையில் உதித்த திட்டமே இந்த ஊரக வாழ்வாதார திட்டம். இதிலே கம்யூனிஸ்ட்களும் உடந்தை.


தத்வமசி
டிச 15, 2025 21:17

இந்த திட்டம் வேஸ்டு திட்டம். இதனால் கிராமங்களோ, நகரங்களோ அடைந்த பயன் என்ன ? மக்களை சோம்பேறிகளாக்கி, அங்கே சுற்றி வரும் அரசியவாதிகளும் அதிகாரிகளும் பங்கு போட்டுக் கொள்ளும் திட்டம் இது. தமிழகத்தில் வடக்கன்ஸ் வருவதற்கு இந்த திட்டமும் ஒரு காரணம். இந்த திட்டம் வந்த பிறகு வேலைக்கு ஆட்களே கிடைப்பதில்லை, மில்லுக்கு, கடைக்கு, விவசாயத்திற்கு ஆட்கள் அதுவும் பெண்கள் கிடைப்பதே இல்லை. வேலையே செய்யாமல் அமர்ந்து இருந்து விட்டு மேஸ்திரி வரும் போது வெறுமனே கணக்கு காட்டி அறுபது:நாற்பது என்று பிரித்துக் கொள்வது தான் இந்த திட்டத்தின் நோக்கமாக செயல்படுகின்றது. இதற்கு பலர் துணை வேறு. பல்லாயிரம் கோடி வீண்.


Priyan Vadanad
டிச 15, 2025 20:25

பெயரை மாற்றாமல் திட்டத்தில் மாற்றம் செய்திருக்கலாமே. காந்திமீது இத்தனை வெறுப்பு ஏன்?


vivek
டிச 16, 2025 07:40

காந்தியை பற்றி எவளோ பாசம்


தாமரை மலர்கிறது
டிச 15, 2025 19:54

ஒட்டுமொத்த இலவசத்தை முடிவுக்கு கொண்டுவருவது நல்லது.


Nagarajan S
டிச 15, 2025 19:47

100 நாளுக்கு பதிலாக 125 நாட்களாக அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது நல்லது தானே ? இதற்கு திமுக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்? ஓஹோ தொழிளார்களுக்கு பணப்பட்டுவாடாவை 60% மத்திய அரசும் 40% மாநில அரசும் ஏற்கவேண்டும் என்பதற்காகவோ? இதனால் 100 நாள் வேலை திட்டத்தில் பொய் பெயர் களை எழுதி கொள்ளை அடித்தது போல இதில் முடியாது என்பதாலோ?


V Venkatachalam, Chennai-87
டிச 15, 2025 19:09

பிரியங்கா பேச என்ன இருக்கு? அவர் எந்த மாநில முதல்வர்? மாநில முதல்வர்கள் யாராவது பேசினால் ஏதோ நம்ம தலையிலும் பணச்சுமையை கட்டிட்டாங்களே ன்னு பேசுறாங்க ன்னு நினைச்சுக் கலாம்..


முருகன்
டிச 15, 2025 19:46

அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் தெரியுமா.......


vivek
டிச 16, 2025 07:41

நீ சொம்பு என்று தெரியும்.


ديفيد رافائيل
டிச 15, 2025 18:59

100 நாளுக்கு பதிலாக 125 நாட்களாக அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. குறை சொல்றவங்க எப்போதுமே குறை சொல்ல தான் செய்வாங்க. DMK க்கு வயித்தெரிச்சல், rive years DMK சாதிக்காததை central government சாதிக்குறாங்கன்னு பொறாமை.


Govi
டிச 15, 2025 18:57

முற்றிலும் ஒழிக்க படனும்


GMM
டிச 15, 2025 18:25

புதிய 125 நாள் திட்டத்தில் மாநில நிர்வாகம் நிதி வழங்க வழிவகை செய்த முறை மிக சிறந்தது. மத்திய அரசு என்பது ஏழை, பணக்கார மாநிலங்களின் சேர்க்கை. அரசு பண வரவு / செலவு கணக்கு தணிக்கைக்கு உட்பட வேண்டும். பொது பணி என்பதால் மாநில, மத்திய பொதுப்பணி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ய வேண்டும். காந்தி உயர் கல்வி பயின்றவர். கூலி வேலைக்கு அவர் பெயர் கூடாது. விவசாய காலங்களில் தடை நல்லது. வரவேற்போம்.


சமீபத்திய செய்தி