உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சண்டிகர் மேயர் தேர்தல்: இண்டியா கூட்டணியை வீழ்த்தி பா.ஜ., வெற்றி

சண்டிகர் மேயர் தேர்தல்: இண்டியா கூட்டணியை வீழ்த்தி பா.ஜ., வெற்றி

சண்டிகர்: சண்டிகர் மாநகர மேயர் தேர்தலில், காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வேட்பாளரை தோற்கடித்து பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றார்.பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் விளங்குகிறது. சண்டிகர் மாநகர மேயர் தேர்தல் இன்று (ஜன.,30) நடைபெற்றது. இண்டியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பா.ஜ.,வை எதிர்த்துக் களமிறங்கின.மேயர் தேர்தலில் 'இந்தியா' கூட்டணிக்கு 20 ஓட்டுக்களும், பா.ஜ.,வுக்கு 16 ஓட்டுக்களும் கிடைத்தன. ஆனால் திடீரென 'இண்டியா' கூட்டணிக்கு கிடைத்த 20 ஓட்டுகளில் 8 செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனால் பா.ஜ.,வின் வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 12 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார்.இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி முதல்முறையாக இணைந்து போட்டியிட்டது. இண்டியா கூட்டணிக்கு தான் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், தோல்வியை சந்தித்துள்ளது. இண்டியா கூட்டணி வேட்பாளர் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளார் என ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

வழக்கு

சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Baskar
ஜன 30, 2024 22:45

பிஜேபி வாழ்க


தாமரை மலர்கிறது
ஜன 30, 2024 20:45

எப்படி ஓட்டுபோடுவது என்ற குறைந்தபட்ச அறிவில்லாத காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மீ அரசியல்வாதிகள் மேயர் ஆக்கினால், நாட்டை குட்டிச்சுவர் ஆகிவிடுவார்கள்.


Velan Iyengaar
ஜன 30, 2024 21:18

செய்வது அநியாயம்... பழி பிறர் மீது போடுவது எல்லாம் ஸ்ரீராமர் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்.. சேர்த்து வைத்து தண்டனை தருவார்... சந்தேகமே இல்லை.


Bahurudeen Ali Ahamed
ஜன 30, 2024 19:59

இந்தியா கூட்டணிக்கு கிடைத்தது20 வாக்கு, அதில் 8 செல்லாதவை, என்ன நடக்குது இங்க . இடையில் என்ன மோசம் நடைபெற்றது என்று தெரியவில்லை


vadivelu
ஜன 30, 2024 20:50

காசு வாங்கி கொண்டு ஒட்டு போடும் மக்களை போல அவர்களும் விலை சென்று இருக்கலாம்.


Godfather_Senior
ஜன 30, 2024 17:52

ஆஹா ஆம் ஆதமியுடன் கூட்டு வைத்ததால் தான் தோற்றோம் என்று கூறி புள்ளி வெச்ச கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுமா ?


Apposthalan samlin
ஜன 30, 2024 17:16

கோல்மால் பண்ணி ஜெயித்தது


vadivelu
ஜன 30, 2024 20:21

கோல்மால் பண்ணியா ஆம் ஆத் மி யும் காங்கிரசும் கவுன்சிலர்கள் ஆனார்கள்.. அப்ப சரி.


padmanaban
ஜன 30, 2024 17:09

இந்தியா கூட்டணியின் எட்டு ஓட்டுக்களை செல்லாது


chandrasekar
ஜன 30, 2024 17:03

மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் என்பதையும் சேர்த்து கூறியிருந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் எட்டு ஓட்டுகளை செல்லாததாக அறிவித்து(அதாவது இருபது ஓட்டுகள் பெற்றதாக) பா.ஜ., வெற்றி பெற்றுவிட்டது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டுகிறது.


Priyan Vadanad
ஜன 30, 2024 17:01

மோடி தலைமையில் "இந்தியா" ஜெயிக்கும்.


abdulrahim
ஜன 30, 2024 16:41

தோற்றுவிடுவோம் என்பதால் தான் சில வாரங்களுக்கு முன்பே தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி தேர்தலை நிறுத்தியது இப்போ தேவையான தில்லுமுல்லுகளை செய்து ஜெயிச்சிருக்கானுங்க


Tamilselvan,kangeyam638701
ஜன 30, 2024 17:35

இது எங்கள் இந்துக்களின் தேசம் நாங்க அப்படித்தான் செய்வோம் உன்னால என்ன பண்ண முடியும்?


Bahurudeen Ali Ahamed
ஜன 30, 2024 20:38

இது இந்தியர்களுக்கான தேசம், எல்லா மதத்தினருக்கான தேசம். கொஞ்சம் திருந்த முயற்சியுங்கள் நண்பா


yts
ஜன 30, 2024 16:11

பிஜே என்பது பாரத் மாதா கி ஜேஇந்தியா என்பது ஆங்கிலம் ஆகவே தோற்கடிக்க வேண்டியவை தான்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை