உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காதலியை பார்க்க மாறுவேடத்தில் சென்று மாட்டிய காதலன்: புர்கா அணிந்தவரை புரட்டிப்போட்ட பொதுமக்கள்

காதலியை பார்க்க மாறுவேடத்தில் சென்று மாட்டிய காதலன்: புர்கா அணிந்தவரை புரட்டிப்போட்ட பொதுமக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மொராதாபாத்: காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து பெண் வேடத்தில் சுற்றித்திரிந்த காதலனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.காதலியை காண, காதலன் பல்வேறு வேஷம் போட்டு, திட்டம் போட்டு செல்வதெல்லாம் சினிமாவில் சகஜமான ஒன்றுதான். நிஜத்திலும் இதுபோன்று காதலியை பார்க்க மாறுவேடத்தில் சென்று மாட்டிக்கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாத் பகுதியில் காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து சந்த் புரா என்ற இளைஞர் சென்றுள்ளார். காதலியின் வீடு அருகே சுற்றித்திரிந்த அவரை அக்கம்பக்கத்தினர் சந்தேக நோக்கத்தில் கூப்பிட்டு விசாரித்தனர்.அப்போது புர்காவை அகற்றும்படியும், ஆதார் அட்டையை காண்பிக்குமாறும் சந்த் புராவிடம் பொதுமக்கள் கேட்டுள்ளனர். புர்காவை அகற்றியதும், அவர் ஆண் எனத் தெரிந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவரை முழுமையாக சோதனை செய்ததில், அவர் சிறிய ரக துப்பாக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். சந்த்தை அடித்து துவைத்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் காதலியை பார்க்கவே புர்கா அணிந்து வந்ததாக கூறியுள்ளார். இருந்தாலும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வாய்மையே வெல்லும்
செப் 03, 2024 23:06

புர்கா அணிந்தாலே சந்தேகம் வருதே ... மயில் தோகை சாம்பிராணி புகையே ..இதற்கு என்னதான் வழி ? வழியா கேட்குற வழி... அமைதி மார்க்கம் திருந்தனும்.. ஆனா அது நடக்காத காரியம்


sankaranarayanan
செப் 03, 2024 20:31

பர்கா அணிந்தவரின் கதியை பார்தியர்களா அதனால்தான் யாருமே பர்கா அணிந்து கொண்டு வெளியே சுற்றக்கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை