மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
ஐதராபாத் : ''என் குடும்ப சொத்து எவ்வளவு என்பது குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவேன்,'' என, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு, தெலுங்கு தேசம் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில், இவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
'அரசியலில் நுழைந்த போது ஏழையாக இருந்தவர், தற்போது பல ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்தது எப்படி' என, காங்கிரஸ் பிரமுகர்கள் இவரை கேள்வி கேட்டனர். சந்திரபாபு நாயுடுவுக்கு, 4,000 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளதாக, கடந்த தேர்தலின் போது, ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளரும், முன்னாள் முதல்வர் ராமராவின் மனைவியுமான லட்சுமி சிவபார்வதியும் தெரிவித்திருந்தார். சந்திரபாபு நாயுடுவுக்கு, சிங்கப்பூரில் நட்சத்திர ஓட்டல் உள்ளதாகவும் சமீபத்தில் ஆந்திர பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இதுகுறித்து, ஐதராபாத்தில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு குறிப்பிடுகையில், ''சிங்கப்பூரில் எனக்கு எந்த இடத்தில் சொத்து உள்ளது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் நிரூபித்தால், அந்தச் சொத்தை அவர்கள் பெயருக்கே எழுதிக் கொடுத்து விடுகிறேன். ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு என்றும் துணை நிற்பேன். தேவைப்பட்டால், என் மனைவி, என் மகன் மற்றும் எனது பெயரில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்ற விவரங்களை விரைவில் வெளியிடுவேன்,'' என்றார்.
4 hour(s) ago | 5
5 hour(s) ago | 18