உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சந்திரபாபு நாயுடு குடும்பத்திற்கு ரூ.931.83 கோடி மதிப்பு சொத்து

சந்திரபாபு நாயுடு குடும்பத்திற்கு ரூ.931.83 கோடி மதிப்பு சொத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தெலுங்குதேச கட்சி தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு குடும்பத்திற்கு ரூ.931.83 கோடி மதிப்பு சொத்து உள்ளது.ஆந்திராவில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில், சித்தூர் தொகுதியில், சந்திரபாபு நாயுடு போட்டியிட உள்ளார். அவர் சார்பில் அவரது மனைவி புவனேஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார். சந்திரபாவுக்கு எதிராக ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கே.ஆர்.ஜெ. பரத் போட்டியிடுகிறார்.வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட சொத்து விவர பட்டியலில், சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்திற்கு ரூ.931.83 கோடி சொத்துக்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரியின் பெயரில் ரூ.895.47 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பெயரில் ரூ.36.35 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து மதிப்பு 2019ம் ஆண்டு இருந்ததை விட 41 சதவீதம் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R Kay
ஏப் 21, 2024 02:27

இதெல்லாம் ஜுஜுபி நீங்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று செல்லவேண்டும்


Ramesh Sargam
ஏப் 20, 2024 20:24

இவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு சேவை செய்ததைவிட, தன்னுடைய குடும்பத்துக்கு சொத்துக்கள் சேர்த்தததுதான் அதிகம்


K.Muthuraj
ஏப் 20, 2024 18:14

ரஜினி ஏன் அரசியலுக்குள் வரவில்லை என்று தமிழர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் அரசியலுக்கு வந்து தேர்தலுக்கு போட்டியிட வந்தால் தனது சொத்துக்களை கணக்கு சொல்ல வேண்டியிருக்கும்


என்றும் இந்தியன்
ஏப் 20, 2024 17:13

அப்படி என்னப்பா இண்டஸ்ட்ரி அல்லது வியாபாரம் செய்தாய்???ஆட்சியில் ஒரு காலத்தில் முதல்வர்???


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை