உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பிரதமர் மோடி, அமித்ஷா, ரஜினி பங்கேற்பு

ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பிரதமர் மோடி, அமித்ஷா, ரஜினி பங்கேற்பு

அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வராக இன்று(ஜூன் 12) சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருக்கு கவர்னர் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a1csmkmg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் உட்பட 24 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். 4வது முறையாக ஆந்திர மாநில முதல்வரானார் சந்திரபாபு நாயுடு.

பங்கேற்பு

விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, நிதின் கட்கரி, சிராக் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, மஹாராஷ்டிரா மாநில முதல்வர் எக்நாத் ஷிண்டே, நடிகர் ரஜினி, அவரது மனைவி லதா, நடிகர்கள் சீரஞ்சீவி, பால கிருஷ்ணன், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆரத்தழுவி வாழ்த்து

முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடுவை, பிரதமர் மோடி ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது சந்திரபாபு சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

வாழ்த்து

4வது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரபாபுவின் தலைமை அம்மாநிலத்தில் செழிப்பையும், நலனையும் கொண்டு வரட்டும். ஆந்திரா மற்றும் தமிழகம் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்கி உள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R S BALA
ஜூன் 12, 2024 13:54

ரஜினி பிஜேபிக்காக போகல சந்திரபாபுக்காக போயிருக்கார் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே மீண்டும் ஆந்திராவில் ஆட்சி அமைப்பார் சந்திரபாபுகாருன்னு பேசியிருக்காரே ரஜினி அந்த வீடியோ நீங்க பார்க்கலயா.


Ramesh Sargam
ஜூன் 12, 2024 12:10

நடிகர் ரஜினி எதற்கு? ஒன்று தைரியமாக பாஜாகாவிற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும். அல்லது எதிர்கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். ரெண்டும் இல்லாமல், இப்படி ரெண்டும் கெட்டானாக இருப்பவர்களை பாஜக கிட்டயே சேர்க்கக்கூடாது. எதிரியை கூட நம்பலாம். ஆனால், இதுபோன்ற ரெண்டும் கெட்டானாக இருப்பவர்களை பாஜக எப்பொழுதும் நம்பவே கூடாது. ஒதுக்கவேண்டும்.


Narayanan
ஜூன் 12, 2024 14:03

அதுதான் புரியவில்லை எதற்கு அந்த வேண்டாத சுமையை ஏற்கிறார்கள் ? ஒருபயனும் இல்லை நாட்டிற்கும் வீட்டிற்கும் .


Senthoora
ஜூன் 12, 2024 14:04

அவ்வளவு தூரம் எதுக்கு, அவர் ஓடி, ஓடி பதவி ஏற்கும் விழாக்களில் பங்குபற்றனும்.


chandrasekar
ஜூன் 12, 2024 15:58

ரஜினி அரசியல் தலைவர் அல்ல.. வெறும் நடிகர். பா.ஜ.,வுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம். அவர் ஆன்மிகவாதி. கடவுளை நம்புபவர். அவ்வளவு தான். பல மாநில அரசியல் பிரமுகர்களுக்கு நண்பர். அவர் கலந்து கொள்வதில் என்ன தப்பு. எதிர்க்கட்சியாக இருந்தாலும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வது அரசியல் நாகரிகம். பல மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது.


இராம தாசன்
ஜூன் 12, 2024 19:25

நாயுடுகாரு அவரோட நண்பர் அவ்வளவு தான்..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை