உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கைத்தடியுடன் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்ற சந்திரசேகர ராவ்

கைத்தடியுடன் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்ற சந்திரசேகர ராவ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: இடுப்பு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை பெற்று குணமடைந்த தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், இன்று கைத்தடியுடன் வந்து எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக்கொண்டார்.தெலுங்கானாவிற்கு கடந்தாண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த பாரத் ராஷ்ட்ர சமிதி, 39 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியதால் ஆட்சியை இழந்தது. 64 தொகுதிகளை வென்று பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.இந்நிலையில், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், தனது வீட்டு குளியறையில் தவறி விழுந்தார். இதில் இடதுபக்க இடுப்பு எலும்பு முறிந்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு மாற்று எலும்பு அறுவை சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். .வீ்ட்டிலேயே நடைபயிற்சி பெற்று வந்தார். நடந்து முடிந்த தேர்தலில் காஜ்வல் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றார். எனினும் மருத்துவ சிகிச்சை இருந்ததால் பதவியேற்கவில்லை. இன்று கைத்தடியுடன் சட்டசபை செயலகம் வந்த சந்திரசோர ராவ், சபாநாயகர் காதம் பிரசாத் குமார் முன் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

vaiko
பிப் 02, 2024 04:17

அடுத்து ஆந்திராவிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேணும். தென்னகத்தில் இருந்து சங்கிகள் துடைத்து எறியப்பட வேண்டும்.


Mohan
பிப் 02, 2024 10:15

குப்புற படுத்திட்டே கனவு காணு ...


Ramesh Sargam
பிப் 02, 2024 01:43

இன்னும் அரசியல் பதவி ஆசை போகவில்லை இந்த மனிதருக்கு.


Mohan das GANDHI
பிப் 01, 2024 23:17

தடியெடுத்தவன் தண்டால் காரன் ஆகா முடியுமா? கண்டிப்பாக இனி மெகா ஊழல் தெலுங்கன் சந்திர சேகர் ராவ், திமுக தெலுங்கு ஸ்டாலினைப்போல வெகு விரைவில் அரசியலில் ஓய்வெடுப்பதே நல்லது ?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி