உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட் அடிக்கும் எம்.பி.,க்களுக்கு செக்

கட் அடிக்கும் எம்.பி.,க்களுக்கு செக்

புதுடில்லி: பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் எம்.பி.,க்களுக்கு வருகைப்பதிவில் புதிய முறை அறிமுகமாகிறது. கூட்டத்தொடர்களில் பங்கேற்க வரும் எம்.பி.,க்கள், 'லாபி'யில் உள்ள, 'டிஜிட்டல்' பலகையில் கையொப்பமிட்டு வருகையை பதிவு செய்வது வழக்கம். சில சமயங்களில் அதிக எம்.பி.,க்கள் கூடுவதால் கூட்டம் அலைமோதும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v401sir2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், சில எம்.பி.,க்கள் வருகையை பதிவு செய்துவிட்டு சபை நடவடிக்கையில் பங்கேற்காமல் வெளியே செல்வதும் நடக்கிறது. இந்நிலையில், இதை தடுக்கும் நோக்கில், வரும் 21ல் துவங்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில், வருகைப்பதிவில் எம்.பி.,க்களுக்கு புதிய முறை அறிமுகமாகிறது. இதன்படி, லாபியில் சென்று வருகைப்பதிவேட்டில் கையெழுத்து போடுவதற்கு பதில், எம்.பி.,க்கள் அவரவர் இருக்கைக்குச் சென்று, மின்னணு முறையில் வருகையை பதிவு செய்ய வேண்டும். இந்த முறையை அமல்படுத்துவதில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D Natarajan
ஜூலை 15, 2025 08:03

பயோமெட்ரிக் தேவையில்லை . முக பதிவு முறையை அமல் படுத்தலாம்


N Sasikumar Yadhav
ஜூலை 15, 2025 06:32

புள்ளிராஜா இன்டி கூட்டு ஆட்களால் பாராளுமன்ற கேண்டின் வியாபாரம் பாதிக்கப்படுமே. சபாநாயகர் கொஞ்சம் கருணை காட்டனும்


Iyer
ஜூலை 15, 2025 05:41

தன் இருக்கைக்கு வந்த உடனும் பின் முடித்துவிட்டு வீடு செல்லும் முன் ஒரு DIGITAL SIGNATURE அவசியமாக்கணும் அதே போல் ஒவ்வொரு MP ம் எவ்வளவு PRODUCTIVE ஆக தன் பணியை செய்கிறார் என்பதை கணக்கிட ஒரு ஏற்பாடு செய்து - அதை PUBLIC DOMAIN ல் வெளியிடனும்.


சகுரா
ஜூலை 15, 2025 05:13

அது மட்டுமல்ல. யார் கட் அடிக்கிறார்களோ அவர்களுடைய அட்டண்டன்ஸ் ரிப்போர்ட்டை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்


Kasimani Baskaran
ஜூலை 15, 2025 03:52

கையெழுத்துப்போட்டு விட்டு கட் அடிப்பவர்களுக்கு சம்பளம் கட் செய்தால் சரியாகிவிடுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை