உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டை சரிபாருங்கள்!

ஓட்டை சரிபாருங்கள்!

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், ஒரு முறைகேடான இயந்திரம். வாக்காளர்கள் ஓட்டுப்போடும் போது, நீங்கள் அழுத்தும் பட்டனுக்கு பக்கத்தில் உள்ள எல்.இ.டி., விளக்கு ஒளிர்கிறதா, விவிபேட் இயந்திரத்தில் அதே சின்னம் தெரிகிறதா என சரிபாருங்கள்.பரூக் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

மேற்கு வங்கத்துக்கு களங்கம்!

சந்தேஷ்காலி சம்பவம் மேற்கு வங்கத்துக்கு களங்கத்தை ஏற்படுத்த பா.ஜ.,வால் திட்டமிட்ட ஒன்று என, நீண்ட நாட்களாக கூறி வந்தேன். தற்போது மேற்கு வங்க விரோதிகளின் உண்மையான முகத்தை புலனாய்வு நடவடிக்கை வெளிப்படுத்தி உள்ளது.மம்தா பானர்ஜி, மே.வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

பாவங்களை மறைக்க முயற்சி!

சந்தேஷ்காலியில் செய்த பாவங்களை மறைக்க, புலனாய்வு என்ற பெயரில் வெளியாகி இருக்கும் வீடியோவை, மம்தா பயன்படுத்துகிறார். மக்கள் அந்த வீடியோவை நம்புவரா அல்லது பாதிக்கப்பட்ட பெண்கள் பிரமாண பத்திரங்கள் வாயிலாக கூறியதை நம்புவரா? சுகந்த மஜும்தார், மாநில தலைவர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ