உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபி பாக் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்

பஞ்சாபி பாக் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்

பஞ்சாபிபாக்:மேற்கு டில்லியில் ஆறு வழி பஞ்சாபி பாக் மேம்பாலத்தை முதல்வர் ஆதிஷி திறந்து வைத்தார்.மேம்பாலத்தை திறந்துவைத்து முதல்வர் கூறியதாவது:பஞ்சாபி பாக் ஆறு வழி மேம்பாலத்தின் நீளம் 1.12 கி.மீ., மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், தினமும் 3.45 லட்சம் மக்கள் பயனடைவார்கள். மூன்று சிக்னல்களில் காத்திருக்கும் நேரத்தை வாகன ஓட்டிகளுக்கு மிச்சப்படுத்துகிறது.இந்த மேம்பாலத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பிரச்னை ஏற்படாது. மக்களுக்கு தினமும் 40,800 மணி நேரம் மிச்சப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். பதினொரு லட்சம் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் சேமிக்க முடியும்.ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பின் கடந்த 10 ஆண்டுகளில் திறக்கப்படும் 39வது மேம்பாலம் இது.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி, நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள அப்சரா எல்லையை ஆனந்த் விஹாருடன் இணைக்கும் ஆறு வழி மேம்பாலத்தை முதல்வர் ஆதிஷி திறந்து வைத்தார். அந்த மேம்பாலத்தால் தினமும் 1.5 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என அவர் தெரிவித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை