உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யதுவீரை விமர்சிக்க வேண்டாம் முதல்வர் சித்தராமையா உத்தரவு

யதுவீரை விமர்சிக்க வேண்டாம் முதல்வர் சித்தராமையா உத்தரவு

மைசூரு: “மைசூரு பா.ஜ., வேட்பாளர் யதுவீரை விமர்சித்துப் பேச வேண்டாம்,” என, மைசூரு மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.மைசூரு லோக்சபா தொகுதியில் இரண்டு முறை பா.ஜ., - எம்.பி.,யாக இருந்தவர் பிரதாப் சிம்ஹா. முதல்வர் சித்தராமையாவை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார். அதற்கு முதல்வரும் பதிலடி கொடுத்து வந்தார்.'மைசூரு தொகுதியில் மூன்றாவது முறை பிரதாப் சிம்ஹா களம் இறக்குவார், அவரை வீழ்த்த வேண்டும்' என, பல மாதங்களாக திட்டம் வகுத்து வந்தார். மகன் யதீந்திராவுக்கும் 'பட்டை' தீட்டினார்.ஆனால், பிரதாப் சிம்ஹாவுக்கு பதிலாக, மன்னர் யதுவீருக்கு, பா.ஜ., சீட் கொடுத்துள்ளது. இதை எதிர்பார்க்காத சித்தராமையா அதிர்ச்சி அடைந்துள்ளார். சொந்த ஊரான மைசூரில் காங்கிரஸ் வேட்பாளரை, வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மைசூரு காங்கிரஸ் பிரமுகர்கள், தலைவர்களுடன், சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.அப்போது முதல்வர் கூறியதாவது:பா.ஜ., பிரதாப் சிம்ஹாவை களம் இறக்கும் என்று நினைத்து, அவரை தோற்கடிக்க திட்டம் வகுத்து வைத்திருந்தேன். ஆனால் யதுவீரை களம் இறக்கி உள்ளனர். இதனால் திட்டத்தை மாற்ற வேண்டி உள்ளது. யதுவீரை பற்றி யாரும் விமர்சித்து பேசிவிட வேண்டாம். அப்படி செய்தால், நமக்கே பிரச்னையாக மாறிவிடும்.மன்னர் குடும்பத்தை பற்றி விமர்சித்துப் பேசினால், அதை உணர்வுப்பூர்வமாக பா.ஜ., பயன்படுத்திக் கொள்ளும். இதனால் பேசும்போது கவனமாக பேசுங்கள்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.“மைசூரில் கட்சியின் செய்தி தொடர்பாளர் லட்சுமண், சாம்ராஜ்நகரில் அமைச்சர் மஹாதேவப்பா மகன் சுனில் போஸ் ஆகியோர் களம் இறங்க வாய்ப்புள்ளது,” என முதல்வர் சித்தராமையா கூறி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்