உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வரின் அரசு இல்ல ஒதுக்கீடு ரத்து: அதிஷி குற்றச்சாட்டு

முதல்வரின் அரசு இல்ல ஒதுக்கீடு ரத்து: அதிஷி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசு தனக்கான வீடு ஒதுக்கீட்டை மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளது என்று டில்லி முதல்வர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அதிஷி கூறியதாவது:டில்லி பேரவைக்கான தேர்தல் இன்று தான் அறிவிக்கப்பட்டது. மூன்று மாதத்தில் இரண்டாவது முறையாக நேற்றிரவே மத்திய பா.ஜ., அரசு என்னை அதிகாரபூர்வ முதல்வர் இல்லத்தில் இருந்து வெளியேற்றிவிட்டது. அவர்கள் கடிதத்தின் மூலமாக முதல்வருக்கான இல்ல ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் இல்லத்தைப் பறித்துக்கொண்டனர்.அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பா.ஜ., என்னையும் குடும்பத்தையும் குறிவைக்கிறார்கள். எங்கள் வேலையை நிறுத்தலாம். ஆனால் டில்லி மக்களுக்காக உழைக்கும் எங்கள் ஆர்வத்தை அவர்களால் நிறுத்த முடியாது.இங்குள்ள ஒவ்வொரு பெண்ணும் மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 2,100 பெறுவதை உறுதி செய்வேன். ஒவ்வொரு அர்ச்சகரும் ரூ. 18,000 கவுரவ ஊதியம் பெறுவார்கள் என்றார்.அதிஷியின் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ.,தலைவர் அமித் மாளவியா கூறுகையில்,அரவிந்த் கெஜ்ரிவாலை புண்படுத்த விரும்பவில்லை என்பதால், 6 பிளாக் ஸ்டாப் ரோட்டில் உள்ள குடியிருப்பை முதல்வர் அதிஷி குடியேற மறுத்ததால், அந்த வீட்டுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. டில்லி முதல்வர் பொய் சொல்கிறார். அவருக்கு 11-அக்டோபர்-2024 அன்று ஷீஷ்மஹால் ஒதுக்கப்பட்டது. கெஜ்ரிவாலை புண்படுத்த விரும்பாததால் அவர் இன்னும் அங்கு செல்லவில்லை. எனவே, ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டது, மேலும் இரண்டு பங்களாக்கள் அதற்கு பதிலாக அவருக்கு வழங்கப்பட்டது.பொதுப்பணித் துறையினரின் ஆதாரங்களின் படி, முதல்வராக அதிஷி பதவி ஏற்ற ஒருவார காலத்துக்குள் அவர் முதல்வர் இல்லத்தில் குடியேற வேண்டும். ஆனால், மூன்று மாதங்களாகியும் அவர் அதைச் செய்யவில்லை அதனால் அவருக்கான வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டள்ளது.இவ்வாறு அமித் மாளவியா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Dharmavaan
ஜன 08, 2025 07:00

எவ்வளவு திருட்டு புத்தி பழி போடல் துடைப்பம் கட்சிக்கு கேவலம் அண்ணா ஹசாரே வெட்கப்பட வேண்டும்


Kasimani Baskaran
ஜன 08, 2025 06:34

துபாய் மன்னருக்கு இணையாக ஒரு வீட்டை புதுப்பித்து அதில் வாழ கெஜ்ரிவால் ஆசைப்பட்டார். துரதிஷ்டவசமாக சிறை செல்ல வேண்டியது வந்ததால் வேறு ஒருவரும் அங்கு செல்ல தயாராகயில்லை. அதை அப்படியே பாஜக செய்த சதி போல உருட்டித்திரிகிறார்கள். இதுகள் மக்களுக்கு சேவைசெய்யப்போகிறேன் என்று சொல்வதைப்போல கேவலமான காமடி வேறு ஒன்றும் இருக்க முடியாது.


Iniyan
ஜன 08, 2025 06:17

தொடப்ப கட்டை கட்சி பொய் பித்தலாட்டம் செய்வதே வேலை


தாமரை மலர்கிறது
ஜன 07, 2025 23:52

கெஜ்ரி ஏன் முதல்வர் வீட்டை விட்டு வெளியேறவில்லை? அதிஷி ஏன் கேட்டு வாங்கவில்லை? கேட்டால், முதல்வர்பதவி பறிபோய்விடும் என்ற பயத்தால் தானே? டெல்லி முதல்வருக்கு ரெண்டு வீடுகள் கொடுக்க முடியாது. தேர்தல் அறிவிச்சாச்சு. அதிஷி முதல்வர் பதவியே இன்னும் ஒன்றரை மாதம் தான். கிளம்பு கிளம்பு. காத்து வரட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை