குழந்தை நரபலி: பெற்றோர் கைது
முசாபர்நகர், உத்தர பிரதேச மாநிலம்முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பெல்டா கிராமத்தை சேர்ந்த தம்பதி மம்தா - கோபால் காஷ்யப்.இந்த தம்பதிக்கு பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை இருந்தது.மம்தாவுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மாந்திரீகரை சந்தித்து கேட்டபோது, அவர் தம்பதியின் குழந்தையை நரபலி கொடுத்தால் தாய் குணமடைவார் என தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அந்த தம்பதியின் குழந்தை மாயமானதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் மம்தா மற்றும் கோபால் காஷ்யப்பிடம் விசாரணை நடத்தினர்.அப்போது, தங்கள் குழந்தையை நரபலி கொடுத்து, உடலை அருகேயுள்ள வனப்பகுதியில் புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, தம்பதியை போலீசார் கைது செய்தனர்.