மேலும் செய்திகள்
108 ஆம்புலன்ஸில் பிரசவம்; பெண் குழந்தை பிறப்பு
25-Sep-2025
அம்பாலா:ரயில் பயணத்தில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு அம்பாலா ரயில் நிலையத்தில், பெண் குழந்தை பிறந்தது. ஜம்மு நகரைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான இளம்பெண், தன கணவருடன் ஜம்மு தாவி - கான்பூர் ரயிலின் பொதுப் பெட்டியில் நேற்று முன் தினம் இரவு பயணம் செய்தார். நள்ளிரவில் அந்தப் பெண் பிரசவ வலியால் துடித்தார். அம்பாலா கன் டோன்மென்ட் நிலையத்தில் ரயில் நின்றவுடன், தயாராக இருந்த டாக்டர்கள் குழு மற்றும் பெண் போலீசார் அந்தப் பெண்ணை ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த அறைக்குத் தூக்கிச் சென்றனர். அங்கு, சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு முதலுதவி செய்து, ஆம்புலன்ஸில் அம்பாலா கன்டோன்மென்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
25-Sep-2025