உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணிப்பெண்ணிடம் சில்மிஷம் குவைத் துாதரக பணியாளர்

பணிப்பெண்ணிடம் சில்மிஷம் குவைத் துாதரக பணியாளர்

சாணக்யபுரி: வேலைக்காரப் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக குவைத் தூதரக பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய டில்லியின் சாணக்யபுரியில் குவைத் துாதரகம் உள்ளது. இங்கு அபுபக்கர், 70, என்பவர் பணியாற்றி வருகிறார். இதே துாதரகத்தில் பராமரிப்புப் பணி செய்து வந்த வேலைக்காரப் பெண்ணிடம் இவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து அவரது கணவர் அளித்த புகாரின்பேரில், சாணக்யபுரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அபுபக்கர், பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் சம்மதிக்காததால் அவரை தாக்கியதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது.போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அபுபக்கரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை