உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீனா vs இந்தியா: சீனாவின் திட்டத்திற்கு எதிராக அருணாச்சலப் பிரதேசத்தில் மெகா திட்டம்!

சீனா vs இந்தியா: சீனாவின் திட்டத்திற்கு எதிராக அருணாச்சலப் பிரதேசத்தில் மெகா திட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இட்டாநகர்: பிரம்மபுத்திரா ஆற்றில் அணை கட்டும் சீனாவின் திட்டத்திற்கு போட்டியாக, அருணாச்சலப் பிரதேசத்தில் வரும் அணை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.உலகின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றான பிரம்மபுத்திரா, திபெத்தில் உற்பத்தியாகி, இந்தியா வழியாக வங்கதேசம் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தற்போது திபெத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்திராவில் பல்வேறு அணைகளை கட்டி, வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்கிறது. அந்த வகையில், இந்திய எல்லையில் மிகப்பெரிய அணை ஒன்றைக் கட்ட சீனா ஏற்பாடு செய்து வருகிறது. இதனால் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பிரம்மபுத்திரா ஆற்றில் வரும் தண்ணீர் குறையும் என்று கருதப்படுகிறது. சீனாவின் திட்டத்தை கருத்தில் கொண்டு, புதிய அணை கட்டும் திட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், இந்த பிரம்மாண்ட அணை கட்ட திட்டங்கள் தயாராகி வருகின்றன. இந்த அணை, அருணாச்சல பிரதேசத்தில் நீர் மின்சார உற்பத்திக்கு பேருதவியாக இருக்கும். சீனா திடீரென்று அதிகப்படியான தண்ணீரை பிரம்மபுத்ராவில் திறந்து விட்டால், அதை தடுப்பதற்கான ஒரு உத்தியாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.புதிய அணை எங்கு அமைய உள்ளது, அதனால் பாதிக்கப்படும் கிராமங்கள், எவ்வளவு நீர் தேக்க முடியும் என்று ஆரம்பகட்ட கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்காக, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்போரை மொத்தமாக இடம்பெயர்வு செய்ய வேண்டி இருக்கும். அந்த கிராம மக்கள், அணை கட்டும் திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V SURESH
ஜன 27, 2025 20:33

பிரம்மபுத்ரா மேல் பகுதியில் சீனா அணை கட்டுவதற்கும், இந்தியா கீழ் பகுதியில் ஒரு அணை கட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. நதியின் நீரினை கட்டுப்படுத்தும் அதிகாரம் சீனாக்காரன் பெற்று விடுவானே. இது தான் கவலை தரும் விஷயம்.


rengaraju sourirajalu
ஜன 27, 2025 09:07

Your imagination comes in to reality,oh God,it would bring entire india with immense Happiness. We should exercise more cautions in bringing such a big projects I. ARUNACHAL after meticulous planning...to counter chinas actions...


visu
ஜன 26, 2025 21:16

இதில் சீனாவுக்கு எதிரா என்ன இருக்கு அவன் அணையை குண்டு வீசி தகர்க்கவா போறோம்


Ganesh Subbarao
ஜன 27, 2025 12:43

ஐயோ ஒண்ணுமே தெரியாமல் கேள்வி கேட்டுகிட்டு இருக்கு கட்டுரையிலேயே பதிலும் இருக்கு


GMM
ஜன 26, 2025 19:37

ஆக்கிரமிப்பு சீனா திபெத் அணை பனாமா கால்வாய் நிலையில் முடியும். திபெத், நேபாள மக்கள் கலாச்சாரம் இந்துக்கள் கலாச்சாரம். சீனா ரகசிய நிர்வாகம், படை வலிமையால் சாதிக்க நினைக்கிறது. இனி பொருளாதார சிதைவு காலம். சீனா தன் நிலப்பரப்பை காக்க போராடும். சீனா அணை மற்றும் பாகிஸ்தான் சில்க் ரோடு இந்திய அரசு கட்டுப்பாட்டில் வரும். தேர்தல் , நீதி , நிர்வாக சீர்த்திருத்தம் இந்தியாவில் செய்தால், அடுத்த நூறாண்டில் முந்தய அகண்ட பாரதம் உருவாகும். சீனாவில் மேற்கத்திய, இஸ்லாம் நாடுகள் போல் பகட்டு நிர்வாகத்தால், பல சிறு நாடுகள் உருவாகும்.


Barakat Ali
ஜன 26, 2025 15:07

இது சீனாவின் திட்டத்துக்கு எதிராக என்று தலைப்பு சொல்கிறது ...... சுய பாதுகாப்பை எப்படி எதிராக என்று சொல்ல முடியும் ???? ஓ .... உச்சுப்பு ஏத்துற வேலையோ .... ஓகேகே ....


Ganesh Subbarao
ஜன 27, 2025 12:46

முதலில் கட்டுரையை முழுவதுமாக படித்து கருத்தை உள்வாங்கி பதிவிடுமய்யா


B MAADHAVAN
ஜன 26, 2025 11:05

நல்ல முயற்சி. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். முயற்சிகள் வெற்றி பெற, நம் நாடு நலம் பெற நல்வாழ்த்துக்கள்.


MUTHU
ஜன 26, 2025 11:32

பங்களாதேஸ்காரன் ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவை குறை சொல்ல மாட்டான். இந்தியாவை குறை சொல்லுவான்.


Visu
ஜன 26, 2025 12:39

ஆமா முத்தண்ணே அவிங்க டிசைன் அப்புடி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை