உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீனாவின் புதிய அணை: மத்திய அரசு உஷார்

சீனாவின் புதிய அணை: மத்திய அரசு உஷார்

புதுடில்லி: நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் கயிலாய மலையில் பிரம்மபுத்ரா நதி உற்பத்தியாகிறது. திபெத்தில் இந்த நதி யார்லங் சாங்போ என்று அழைக்கப்படுகிறது. அங்கு உள்ள மேடாக் பகுதியில் பிரம்மபுத்திராவின் குறுக்கே 60,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் நீர்மின் திட்டத்துடன் கூடிய பிரமாண்ட அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த நதி பாயும் கீழ் பகுதிகளான நம் நாட்டின் அருணாச்சல், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு பிரச்னை ஏற்படும் என்ற கவலை நிலவுகிறது. இதுகுறித்து, மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ராஜ்யசபாவில் கூறியதாவது: பிரம்மபுத்ரா நதியில், சீனாவின் நீர்மின் திட்டங்கள் உட்பட அனைத்து விஷயங்களையும் அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. நாட்டின் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.பிரம்மபுத்ரா தொடர்பான பிரச்னைகளை சீனாவுடன் விவாதிக்க, 2006ல் ஏற்படுத்தப்பட்ட நிபுணர்- தலைமையிலான அமைப்பு மற்றும் நம் துாதரகம் ஆகியவை உதவி புரிகின்றன. எல்லைக்கு வெளியே உற்பத்தியாகும் நதியாக இருந்தாலும், அதன் கீழ் கரையோர மாநிலங்களுக்கு அந்த நதியின் நீரில் உரிமை உண்டு. இதுகுறித்து சீன அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.கீழ் கரையோர பகுதிகளின் நலன்கள், நதியின் மேல் பகுதிகளில் உருவாக்கும் திட்டங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும்படி வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

aaruthirumalai
பிப் 14, 2025 12:25

சீனாவை அடக்க இப்போது முடியாது.


பாமரன்
பிப் 14, 2025 11:21

இந்த அணை கட்டும் விஷயத்தில் இந்தியா அதிகபட்சம் வேடிக்கை பார்ப்பது மட்டுமே முடியும்... எதிரி கட்சியினர் கையில் வேறு பிரச்சினை இல்லைன்னா இதை காட்டி டெம்பரரியா கூச்சல் போட உதவும்...‌அவ்ளோ தான்


vivek
பிப் 14, 2025 16:20

வந்துட்டான் கூவம் பேசும் கொத்தடிமை


Ganesh Subbarao
பிப் 14, 2025 16:29

எப்படி? யாரு அந்த சார்ன்னு கண்டுபிடிக்க முடியாம விடியல் ஆட்சி வேடிக்கை பாக்குற மாதிரியா?


vivek
பிப் 14, 2025 17:58

ஒரு கூவம் கூவுது.... பாமரம் வீசுது....அடடே கவிதை கவிதை....


S.Martin Manoj
பிப் 14, 2025 08:36

புஸ்ஸ்


guna
பிப் 14, 2025 16:21

கருமம்....ஒரே பேட் ஸ்மெல்... மார்டின்


Kasimani Baskaran
பிப் 14, 2025 06:12

அண்டை மாநிலமே வம்பு செய்யும் பொழுது அண்டை நாடு வம்பு செய்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


சமீபத்திய செய்தி