உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்: எல்லைப் பிரச்னை குறித்து பேச்சு

இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்: எல்லைப் பிரச்னை குறித்து பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளன.சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் ஆகியோர் பங்கேற்றனர். இச்சூழ்நிலையில், இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.இம்மாநாட்டில், அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து எல்லைப் பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்த உள்ளார். பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் அவர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் பார்லிமென்டில் கூறுகையில், சிக்கிமின் நாது லா கணவாய், உத்தராகண்டின் லிபுலெ கணவாய், ஹிமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தம் தொடர்பாக சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
ஆக 14, 2025 10:07

சீனாவிலிருந்து இறக்குமதியை இரட்டிப்பாக்க நல்ல வாய்ப்பு. சும்மா உட்டுருவாங்களா? இங்கேருந்து ஒவ்வொருத்தரா போய் டீ குடிச்சு பேசிட்டு வர்ராங்க.


subramanian
ஆக 13, 2025 20:57

சீனாவின் துரோகம் மறக்க கூடாது. நாம் நட்பை சொன்னால், சீனா ஆக்ரமித்து ஆட்டம் போடும். காங்கிரஸ் ஆட்சியில் ஏமாற்ற பட்டோம் . இந்தியாவின் நிலத்தை கொடுக்க வேண்டும். 1947 நிலைகளுக்கு சீனா பின்வாங்க வேண்டும்.


Murthigaru
ஆக 13, 2025 20:56

நீங்கள் சொல்வது மிகவும் சரி. இந்தியா ரஷ்யா சீனா இணைந்துவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் . இது கட்டாயம் நடக்கும்


Ramesh Sargam
ஆக 13, 2025 20:19

இந்தியா, சீனா இடையேயான மனஸ்தாபங்கள் நீங்கி, நல்லுறவு ஏற்பட்டால், அமெரிக்கா என்ன, மற்ற எந்த கொம்பனாலும் நம்மை எந்தவிதத்திலும் எதிர்க்க முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை