உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதமர் மோடி உடன் சந்திப்பு

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதமர் மோடி உடன் சந்திப்பு

புதுடில்லி: எல்லையில் சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியை டில்லியில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசினார்.இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று டில்லி வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 19) வாங் யீ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா - சீனா எல்லைப் பிரச்னைகள் குறித்து இருவரும் கலந்து ஆலோசித்தனர்.தற்போது, எல்லையில் சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியை டில்லியில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த பயணம் குறித்து பிரதமர் மோடியுடன் வாங் யீ பேசினார். மேலும் இரு நாடுகளுக்கு இடையான உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்ததாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

முன்னேற்றம்

இது குறித்து சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்ததில் மகிழ்ச்சி. கடந்த ஆண்டு கசானில் அதிபர் ஜின்பிங் உடனான எனது சந்திப்பிலிருந்து, இந்தியா-சீனா உறவுகள் முன்னேற்றத்தை அடைந்துள்ளன. எஸ்சிஓ உச்சிமாநாட்டின் போது தியான்ஜினில் நடைபெறும் எங்கள் அடுத்த சந்திப்பை நான் எதிர்நோக்குகிறேன். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலையான, ஆக்கபூர்வமான உறவுகள், உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஆக 19, 2025 22:56

கல்வானா அது எங்க இருக்கு?


Priyan Vadanad
ஆக 19, 2025 20:53

காங்கிரசையும், இப்போது ராகுலையும் படு கீழ்த்தரமாக விமர்சிக்கும் வாடகை வாசகர்களே எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள்? யார் உங்களை ரிஸார்டுகளில் சிறைபிடித்துள்ளார்கள்?


Ramesh Sargam
ஆக 19, 2025 22:06

பதிவான செய்திக்கும், உங்கள் கருத்துக்கும் என்ன சம்பந்தம்?


vivek
ஆக 19, 2025 22:32

சாம்பிராணி பிரியன்...ராகுல் திருட்டு தனமா போனது உமக்கு தெரியாதே


Thamarai
ஆக 20, 2025 06:14

ஏதாவது சம்பந்தம் இருக்கா தாங்கள் மேற் கூறிய கருத்தில்


vivek
ஆக 20, 2025 11:24

இந்த உளுந்து வடை என்ன கேட்குது?


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 19, 2025 19:44

விடியல் சார் ராவுல் சார் கம்மிஸ் சார் ஸ்டார்ட் மியூசிக்


முக்கிய வீடியோ