சினிகடலை
* போலீஸ் அதிகாரிநடிகை சரண்யா ஷெட்டி, 1980, நகுவின ஹூகளே , கிருஷ்ணம் பிரணய சகி உட்பட, கன்னடத்தில் பல படங்களில் நடித்தவர். சில ஆண்டுகளாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை என, ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின், நடிப்புக்கு திரும்பி உள்ளார். நடிகர் பிரேமுக்கு ஜோடியாக, போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பல ஆண்டுகளுக்கு பின், நடிப்பதால் இப்படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார். இதுவரை நடித்திராத கதை, கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறுகிறார். இதற்கிடையே தெலுங்கு படம் ஒன்றிலும் சரண்யா நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பை துவங்க, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.* காமெடிகன்னட திரையுலகில் புதுமுகங்கள் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இவர்களின் வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர் நடிகை மிருதுளா. இவர் குருநந்தன் நாயகனாக நடிக்கும், ராஜு ஜேம்ஸ்பாண்ட் படத்தில், நாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம், பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று, திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இது காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படமாகும். குருநந்தன் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். மிருதுளாவுக்கு இது முதல் படம். படம் எப்போது திரைக்கு வரும் என, ஆவலோடு காத்திருக்கின்றனர். இதில் மிருதுளா ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.* வயிறு குலுங்க...செல்பி மம்மி கூகுல் டேடி திரைப்படத்தை இயக்கிய மதுசந்திரா, தற்போது மி.ராணி என்ற படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் நேற்று முன் தினம் திரைக்கு வந்து, ஹவுஸ்புல்லாக ஓடுவதால் படக்குழுவினர் குஷி அடைந்துள்ளனர். படம் துவக்கம் முதல், இறுதி வரை, ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. படத்தின் நாயகன், திரைப்படத்தில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன், திரையுலகுக்கு வருகிறார். ஆனால் எதிர்பாராமல் ஹீரோயின் ஆகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே, கதையின் சாராம்சமாகும். சின்னத்திரையில் அடையாளம் காணப்பட்ட தீபக் சுப்ரமண்யா, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.* நல்ல எதிர்காலம்தயாரிப்பாளர் தருண் கிஷோர் சுதீர், புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பது வழக்கம். இதற்கு முன், காடேரா திரைப்படத்தில், ஆராதனா ராமை நாயகியாக அறிமுகம் செய்திருந்தார். படம் நன்றாக ஓடியது. இம்முறை தன் புதிய படத்தில் பிரியங்கா ஆச்சாரை நாயகியாக்கி உள்ளார். மைசூரை சேர்ந்த பிரியங்கா ஆச்சார், மஹாநடிகை ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வெற்றி பெற்றவர். நாடகங்களில் நடித்து பயிற்சி பெற்றார். ரியாலிடி ஷோவில் பங்கேற்றதால், அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. தருண் கிஷோர் சுதீர் அறிமுகம் செய்த நடிகைகள், இன்று பெரிய அளவில் சாதித்துள்ளனர். அதே போன்று தனக்கும் திரையுலகில் நல்ல எதிர்காலம் இருக்கும் என, பிரியங்கா நம்புகிறார். இது உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட படமாம்.* குளறுபடிகள்இசை அமைப்பாளராக, திரையலகில் நுழைந்து பல வெற்றி படங்களில் பணியாற்றியவர் அரோனா கார்த்திக். அதன்பின் தர்ப்பனா, பரிசுத்தம் உட்பட, பல படங்களை தயாரித்து, இயக்கினார். தற்போது ஜஸ்டிஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார். படத்தின் நாயகனும் இவரே. இது பிப்ரவரி 14ல், திரைக்கு வருகிறது. நம் நாட்டின் சட்டங்களில் உள்ள குளறுபடிகள், இத்தகைய சட்டங்களால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் என்ன என்பது குறித்து, படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. பரோலில் வெளியே செல்லும் நபர், அவ்வப்போது குற்றங்களை செய்கிறார், அவரது பின்னணி என்ன, அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது, மகளிர் பாதுகாப்பு என, பல அம்சங்கள் படத்தில் உள்ளன. நடிகர் சர்க்கார் சாஹில், மற்றொரு நாயகனாக நடித்துள்ளார்.* ஹேர் ஸ்டைல்ஹெப்புலி திரைப்படத்தில், நடிகர் சுதீப்பின் ஹேர் ஸ்டைல் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதிகம் பேசப்பட்டது. இளைஞர்கள், சிறுவர்கள் இது போன்று ஹேர் ஸ்டைல் செய்து கொண்டனர். 'ஹெப்புலி கட்' என டிரென்ட் ஆனது. தற்போது இதே பெயரில் திரைப்படம் தயாராகிறது. சமீபத்தில் படத்தின் துணுக்குகளை படக்குழுவினர் வெளியிட்டனர். நாயகிக்கு நடிகர் சுதீப் மற்றும் அவரது ஹெப்புலி கட் என்றால், மிகவும் விருப்பம். இதை அறிந்த நாயகன், தானும் அதே போன்று ஹேர் ஸ்டைல் செய்து கொள்கிறார். அதன்பின் ஏற்படும் சம்பவங்களே, படத்தின் சாராம்சம். மார்ச் இறுதியில் படம் திரைக்கு வரவுள்ளது.